Wednesday, 17 September 2014

சட்டம் படித்தவர்களுக்கு தமிழக நீதிமன்றங்களில் 162 சிவில் நீதிபதி பணி

தமிழக சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள காலியாக உள்ள 162 சிவில் நீதிபதி பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட இருக்கிறார்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விளம்பர எண்: 15/2014
பணி: சிவில் நீதிபதி (பதவி கோடு: 2089)
காலியிடங்கள்: 162
சம்பளம்: மாதம் ரூ.27.700 - 44,770
வயதுவரம்பு: 22 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு சட்டப் படிப்பை முடித்து இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும். பொது பிரிவு சேராதவர்களுக்கு 5 மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படும்.
வயதுவரம்பு சலுகை: விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 26.08.2014 தேதியின்படி நிர்ணயிக்கப்படும். கடந்த கல்வியாண்டில் அதாவது (2013 - 2014)ல் சட்டப்ப படிப்பை முடித்த இளம் பட்டதாரிகளுக்கு வயதுவரம்பு சலுகை கிடையாது. ஏற்கனவே சட்டப் படிப்பை முடித்து நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி கொண்டிருப்பவர்களில் பொது பிரிவினருக்கு 35 வரையிலும், இதர பிரிவினருக்கு 40 வயது வரையிலும் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.10.2014 மற்றும் 19.10.2014
எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம்: ரூ.175. இதனை ஆன்லைன் ஆல்லது ஆஃப்லைன் முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment