இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்தூரில் செயல்பட்டு வரும் Raja Ramanna Centre for Advanced Technology என்ற அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீசியாக பணியமர்த்தப்படும் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RRCAT-2/2014
பயிற்சி பெயர்: Stipendiary Trainee Category-I
காலியிடங்கள்: 24
பிரிவு: இயற்பியல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்மென்ட்ரேஷன், எலக்ட்ரிக்கல்
பயிற்சியின் பெயர்: Stipendiary Trainee Category-II
காலியிடங்கள்: 26
காலியிடங்கள்: எலக்ட்ரானிக்ஸ், பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், டிராப்ட்மேன்(சிவில்), டிராப்ட்மேன்(மெக்கானிக்கல்)
வயதுவரம்பு: 29.09.2014 தேதியின்படி 19 - 24க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி மற்றும் உதவித்தொகை: கேட்டகிரி-I பிரிவினருக்கு முதல் வருடம் மாதம் ரூ.9,300 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.10,500 வீதமும், கேட்டகிரி-II பிரிவினருக்கு முதல் வருடம் மாதம் ரூ.6,200 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.7,200 வீதமும் உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcat.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ADMINISTRATIVE OFFICER-III, RAJA RAMANNA CENTRE FOR ADVANCED TECHNOLOGY, DEPARTMENT OF ATOMIC ENERGY, PO: CAT, INDORE - 452013 (M.P)
மேலும் கல்வித்தகுதி, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rrcat.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment