இந்திய கப்பற்படையில் எக்சிகியூட்டிவ் பிரிவு (ஜெனரல் சர்வீஸ்) ஹைட்ரோ கேடர், ஐடி மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பணியில் அமர நடத்தப்படும் போட்டித்தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கேரளா, ஏழிமலாவில் உள்ள கப்பற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும். 2015 ஜூன் மாதம் பயிற்சி தொடங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
I. Executive Branch:
பணி: Executive (GS/Hydro Cadre)
தகுதி: ஏதாவரு ஒரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive (IT)தகுதி: 65 சதவிகித மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஐடி பிரிவில் பி.இ அல்லது பி.டெக்., அல்லது பிஎ ஸ்சி (ஐடி) அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்சி., அல்லது பிசிஏ, எம்சிஏ முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட இரு பிரிவுகளுக்கும் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
II. Technicial Branch (General Service):
பணி: Engineering (E) Branchதகுதி: மெக்கானிக்கல், மரைன், ஆட்டோ மோடிவ், மெக்ட்ரானிக்ஸ், இன்ட்ஸ்ட்ரியல் மற்றும் புரொடக்சன், மெட்டாலர்ஜி, ஏரோநாட்டிக்ஸ், ஏரோ ஸ்பேஸ் போன்ற ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ். மரைன் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
பணி: Electrical (L) Branchதகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், பவர் இன்ஜினியரிங், கன்ட்ரோல் சிஸ்டம் இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட இரு பிரிவுகளுக்கும் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
III. Technical Branch: (Sub Marine Specialisation).
பணி: Engineering Branchதகுதி: மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்ட்ரானிக்ஸ், இன்டஸ்ட்ரியல் மற்றும் புரொடக்சன்/ மெட்டாலர்ஜி, ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், பிஎஸ் மரைன் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ், இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட், புரொடக்சன் இன்ஜினியரிங் துறைகளில் 65 சதவித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Electrical Branchதகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கண்ட்ரோல், டெலி கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், பவர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கண்ட்ரோல் சிஸ்டம் இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Technical Branch:(Naval Architecture)தகுதி:மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், மெட்டலர்ஜி, நேவல் ஆர்க்கிடெக்சர் போன்ற ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு இருபாலாரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 19 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1990 - 01.01.1996க்கும் இரண்டு தேதிகளுக்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஒரே படிவத்தில் விண்ணப்பிக்கலாம். அதே படிவத்தில் அவர்களது பணி முன்னுரிமையை குறிப்பிட வேண்டும்.
உடல் தகுதிகள்:உயரம் - ஆண்களுக்கு: 157 செ.மீட்டரும், பெண்களுக்கு: 152 செ.மீட்டரும் உயரத்திற்கு ஏற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: பெங்களூர், போபால், கோவை ஆகிய மையங்களில் 2014 நவம்பர் முதல் 2015 பிப்ரவரிக்குள் தேர்வு நடைபெறும். இரு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.nausena-bharti.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட அவுட் எடுத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box No.04,
Chankyapuri P.O.,
NEWDELHI110 021.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2014.
பிரிண்ட் அவுட் அனுப்புவற்கான கடைசி தேதி: 16.09.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment