இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான செய்ல் உருக்காலை நிறுவனத்தின் ரூர்கேலா கிளையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. நர்ஸிங் சிஸ்டர் டிரெய்னி - 21
02. நர்ஸிங் பிரதர் டிரெய்னி - 08
03. மெடிக்கல் கன்சல்டன்ட்/ஸ்பெஷலிஸ்டில் - 02
04. சீனியர் மெடிக்கல் ஆபிசர் - 09
விண்ணப்பக் கட்டணம்: நர்ஸிங் பிரிவிற்கு ரூ.250, மெடிக்கல் எக்ஸிகியூடிவ் பணிக்கு ரூ.500. இதனை Power Jyoti Account No. 31955226331 at SBI, RSP Campus Branch, Rourkela” என்ற பெயருக்கு ரொக்கமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதள செலான் மூலம் கட்டணம் செலுத்திய பின் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தியான விண்ணப்பத்தின் விவரத்தை கணினிப் நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014
மேலும் கல்வித்தகுதி, தேர்வுத் திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment