Saturday, 2 August 2014

ராணுவ ஆயத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் பணி

ராணுவ அமைச்சகத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலம் அம்பாஜாரியில் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1572 சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chargeman
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Mechanical - 876
02. Information - 23
03. Electrical - 133
04. Chemical - 296
05. Civil - 39
06. Metallurgy - 46
07. Clothing Technology - 32 ]
08. Leather Technology - 04
09. Non Technical (Stores) - 41
10. Non Technical (OTS) - 59
11. Automobile - 03
12. Electronics - 20
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். Non Technical (Stores), Non Technical (OTS) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங், டெக்னிக்கல், கலைப்பிரிவு, அறிவியல், வணிகவியல், சட்டம் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 09.08.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை PRINCIPAL DIRECTOR, RECRUITMENT FUND OFRB, AMBAJHARI NAGPUR என்ற வங்கி கணக்கில் செல்லான் மூலம் செலுத்த வேண்டும். செலானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.ofb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, திருச்சி, அருவங்காடு (ஊட்டி அருகில்)
ஆன்லைனில் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014
ஆன்லைன் விண்ணப்பப்படிவ நகல் சென்று சேர கடைசி தேதி: 16.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofb.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment