பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் தனித்து பூனாவில் UGC விதியின்படி நிகர்நிலை பல்கலைக்கழகமாக செயல்பட்டு வரும் ராணுவ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Assistant
விளம்பர எண்: 03/2014 (NTS-DIAT(DU)
பணி: Assistant
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 கீகளை அழுத்தும் வேகத்தில் டேட்டா என்ட்ரி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி காலம்: 12 மாதம்
உதவித்தொகை: பயிற்சியின்போது 6 மாதத்திற்கு மாதம் ரூ.7,600 வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Vice Chancellor, D.I.A.T.(DU), PUNE என்ற பெயரில் SBI, Girinagar Branch (Code:02155) PUNE-411025ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://diat.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கையெழுத்திட்டு அதனுடன் டி.டி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித்தகுதி, சாதி போன்ற தேவையான சான்றிதழ்கள் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அழுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2014
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy Registrar (Admin), Defence Institute of Advanced Technology, Girinagar, Pune - 411025.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://diat.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment