இந்திய நிலக்கரி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Junior Overman, Mining Sirdar, Deputy Surveyor பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Overman
காலியிடங்கள்: 94
அடிப்படை சம்பளம்: ரூ.19,035.02
தகுதி: நிலக்கரி சுரங்க ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி DGMS அங்கீகாரம் பெற்ற OVERMAN சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது நிலக்கரி சுரங்க ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி Overman ஆக வேலை செய்ய தகுதியான Mining சான்றிதழை இதர நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Gas Testing மற்றும் First Aid சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Mining Sirdar
காலியிடங்கள்: 238
அடிப்படை சம்பளம்: ரூ.19,035.02
தகுதி: நிலக்கரி சுரங்க ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி DGMS அங்கீகாரம் பெற்ற Mining Sirdar சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Gas Testing மற்றும் First Aid சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும். அல்லது நிலக்கரி சுரங்க ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி Overman ஆக வேலை செய்ய தகுதியான Mining சான்றிதழை இதர நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Gas Testing மற்றும் First Aid சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Surveyor
காலியிடங்கள்: 15
அடிப்படை சம்பளம்: ரூ.19,035.02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்வதற்காக DGMS அங்கீகாரத்துடன் வழங்கப்படும் Mines Survey சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 17.09.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: OBC (Non Creamy Layer) பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை Central Coalfields Limited என்ற பெயரில் Ranchi-ல் மாற்றத்தக்க வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டி..டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.ccl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2014
ஆன்லைன் விண்ணப்பப்ப படிவ நகல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (Recruitment), Recruitment Department, 2nd Floor, Damodar Building, Central Coalfields Limited, Darbhanga House, Ranchi-834029.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment