Saturday, 11 October 2014

ஜம்மு & காஷ்மீரில் இளநிலை பொறியாளர் பணி

ஜம்மு & காஷ்மீர் அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள 838  ஜூனியர் பொறியாளர், ஜூனியர் சுருக்கெழுத்தாளர், விண்ணப்பம் வரவேற்கிறது உதவி பண்டகக் காப்பாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜம்மு & காஷ்மீர் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01-2014
பணி இடம்: ஜம்மு காஷ்மீர்
பணி: ஜூனியர் பொறியாளர் (சிவில்)
காலியிடங்கள்: 174
தகுதி: சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது AMIE முடித்திருக்க வேண்டும்.

பணி: உதவி பண்டக காப்பாளர் மற்றும் எழுத்தர்
காலியிடங்கள்: 72
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: ஜூனியர் சுருக்கெழுத்தாளர்
காலியிடங்கள்: 50
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 65 - 35 வார்த்தைகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.jkssb.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2014
மேலும் முழுமையான வி்வரங்கள் அறிய http://www.jkssb.nic.in/Pdf/Downloader.ashx?nid=20&type=a என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment