காப்பீட்டு துறையில் முன்னணி பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 509 Administrative Officers (AO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Officer (Scale-I)
காலியிடங்களின் எண்ணிக்கை: 509
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Finance - 65
தகுதி: Chartered Accountant (ICAI),
Cost Accountant (ICWA)/ MBA நிதியியல், B.Com, M.Com முடித்திருக்க வேண்டும்.
2. Engineering - 25
தகுதி: Civil/ Mechanical /Electrical/ Electronics & Communication துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
3. Legal - 40
தகுதி: சட்டத்துரையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Automobile Engineering - 30
தகுதி: Automobile துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
5. Generalist - 349
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.36,000
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி, எஸ்.டி, பொதுப்பணித்துறை, பெண்களுக்கு ரூ.50. இதனை Debit Cards/Credit cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 10.01.2015 மற்றும் 11.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://newindia.co.in/downloads/Detailedadvertisementtobepublishedonwebsiteon10-10-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment