தமிழ அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி குறியீடு: 14PG
அறிக்கை வெளியிடப்பட்ட தேதி: 07.11.2014
மொத்த காலியிடங்கள்: 1,807
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
* தமிழ் - 277
* ஆங்கிலம் - 209
* கணிதம் - 222
* இயற்பியல் - 189
* வேதியியல் - 189
* தாவரவியல் - 95
* விலங்கியல் - 89
* வரலாறு - 198
* பொருளியல் - 177
* வணிகவியல் - 135
* உடற்கல்வி - 27
பணி: முதுகலை பட்டதாரி ஆசிரியர்
வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டடோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250. இதனை STATE BANK OF INDIA, INDIAN OVERSEAS BANK, INDIAN BANK-ன் ஏதாவதொரு கிளையில் விண்ணப்ப கட்டணத்திற்கான செலானை பூர்த்தி செய்து ரொக்கமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரக்கள் தங்களது மாவட்ட தலைமை கல்வி அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணத்துக்கான செலான் இணைக்கப்பட்டிருக்கும். இதனை பயன்படுத்தி தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.