உத்தர பிரதேசத்தில் செயல்பட்டு வரும் தேசிய அனல் மின் கழகம் (என்.டி.பி.சி.), Rihand சூப்பர் அனல் மின் திட்ட பிரிவில் நிரப்பப்பட உள்ள 143 கைவினைஞர் பயிற்சி, ஆய்வக உதவியாளர் பயிற்சி பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: National Thermal Power Corporation (NTPC)
காலியிடங்கள்: 143
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Artisan Trainee - 129
(i) Fitter - 30
(ii) Electrician - 55
(iii) Instrument Mechanic - 44
2. Lab Assistant Trainees - 14
கல்வித்தகுதி:
1. கைவினைஞர் பயிற்சி பணிக்கு Fitter, Electrician, Instrument Mechanics, Electronics போன்ற துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
2. ஆய்வக உதவியாளர் பயிற்சிக்கு வேதியியல் துறையில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: கைவினைஞர் பயிற்சிக்கு விண்ணப்பவர்கள் 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சி மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.11,500 உதவித்தொகையாக அளிக்கப்படும்.
பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ.11,500 - 3% - ரூ. 26,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வுக்கான வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அமைந்திருக்கும். இரண்டு பாகங்களாக நடைபெறும்.