Showing posts with label tnpsc updates 2014. Show all posts
Showing posts with label tnpsc updates 2014. Show all posts

Saturday, 11 January 2014

மே 18 ல் குரூப்-2ஏ தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-2ஏ தேர்வு வருகிற மே மாதம்
18 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு ஜனவரி 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2014-15ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு பட்டியலை செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:
1,181 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-2ஏ தேர்வு வரும் மே மாதம் 18 ஆம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பு இந்த மாதம் 3வது வாரத்தில் வெளியிடப்படும்.

Tuesday, 7 January 2014

இந்திய கனிம வளம் - indian available minerals resources

* இந்தியாவில் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த உலோகம் தாமிரம் ஆகும்.
* இந்தியாவைப் பொறுத்த வரையில் உலோகத் தாதுக்களில் இரும்பு, பாக்சைட், மாங்கனீசு போன்றவை பெருமளவிலும், செம்பு, தங்கம், காரீயம், துத்தநாகம் போன்ற ஓரளவு பங்கு பெற்று வருகின்றன.
* இந்தியாவில் பொதுவாக தாதுப்பொருட்களில் மினரல்ஸ் வளமிகுந்து காணப்படுகின்றன.
* தாதுப்பொருட்கள் தொழிற்சாலைகளின் வைட்டமின்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை இயற்கையின் அன்பளிப்பு என்றும் குறிப்பிடப்படுகின்றன.
* அலோகத் தாதுக்களில் மைக்கா, சுண்ணாம்பு போன்றவை அதிகயளவில் காணப்படுகின்றன.
இரும்புத்தாது
* இந்தியா இரும்புத்தாது உற்பத்தியில் 7-வது இடத்தை பெற்றுள்ளது.
* இந்தியாவில் மிக அதிகமாகக் கிடைக்கும் இரும்புத்தாது வகை - ஹேமடைட்.
* இந்தியாவில் இரும்பின் கனிகளில் மாக்னடைட் மற்றும் ஹேமடைட் போன்றவை அதிகயளவில் கிடைக்கின்றன.
* ஹேமடைட்டில் 68 சதவீத இரும்பும், மாக்னடைட்டில் 50 - 60 சதவீத இரும்பும், லிமோனைட்டில் 30 சதவீத இரும்பும் காணப்படுகின்றன.
* சமீபத்திய தகவலின்படி 13000 மில்லியன் டன்  அளவிற்கு இரும்புத்தாது இரும்பு வெட்டியெடுக்கப்படமாலே உள்ளதாகத் தெரிவிக்கிறது. அவற்றில் தரமான இரும்புத்தாது ஒரிசா மாநிலம் கியாஞ்சார், போனை, மயூர்பஞ்ச் மாவட்டங்களில் கிடைக்கிறது.

Wednesday, 10 July 2013

குரூப் 2 கேள்வித்தாள் அவுட்: பிரஸ் ஓனர் ரிஷிகேஷ் குண்டு கைது

குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரிஷிகேஷ் குண்டு என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழகம் முழுவதும் 12.8.2012-ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் முன்கூட்டியே வினாத்தாளை வைத்திருந்த இளம்பெண்ணை அதிகாரிகள் பிடித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவர் உள்பட மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்தை úóந்த மனோகரன் மகன் மோகன்பாபு (24), சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கணக்காளராக பணியாற்றும் ஜெய்நிவாசன் (26), மேடவாக்கத்தை சேர்ந்த பச்சியப்பன் மகன் சதீஷ்குமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல நாமக்கல்லை சேர்ந்த இன்டர்நெட் மைய உரிமையாளர் செல்வராஜ், திருவள்ளூரை சேர்ந்த சகோதரர்கள் தியாகராஜன்,