* இந்தியாவைப் பொறுத்த வரையில் உலோகத் தாதுக்களில் இரும்பு, பாக்சைட், மாங்கனீசு போன்றவை பெருமளவிலும், செம்பு, தங்கம், காரீயம், துத்தநாகம் போன்ற ஓரளவு பங்கு பெற்று வருகின்றன.
* இந்தியாவில் பொதுவாக தாதுப்பொருட்களில் மினரல்ஸ் வளமிகுந்து காணப்படுகின்றன.
* தாதுப்பொருட்கள் தொழிற்சாலைகளின் வைட்டமின்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை இயற்கையின் அன்பளிப்பு என்றும் குறிப்பிடப்படுகின்றன.
* அலோகத் தாதுக்களில் மைக்கா, சுண்ணாம்பு போன்றவை அதிகயளவில் காணப்படுகின்றன.
இரும்புத்தாது
* இந்தியா இரும்புத்தாது உற்பத்தியில் 7-வது இடத்தை பெற்றுள்ளது.
* இந்தியாவில் மிக அதிகமாகக் கிடைக்கும் இரும்புத்தாது வகை - ஹேமடைட்.
* இந்தியாவில் இரும்பின் கனிகளில் மாக்னடைட் மற்றும் ஹேமடைட் போன்றவை அதிகயளவில் கிடைக்கின்றன.
* ஹேமடைட்டில் 68 சதவீத இரும்பும், மாக்னடைட்டில் 50 - 60 சதவீத இரும்பும், லிமோனைட்டில் 30 சதவீத இரும்பும் காணப்படுகின்றன.
* சமீபத்திய தகவலின்படி 13000 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது இரும்பு வெட்டியெடுக்கப்படமாலே உள்ளதாகத் தெரிவிக்கிறது. அவற்றில் தரமான இரும்புத்தாது ஒரிசா மாநிலம் கியாஞ்சார், போனை, மயூர்பஞ்ச் மாவட்டங்களில் கிடைக்கிறது.