Monday 29 February 2016

பவர் நிதி நிறுவனத்தில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு நிறுவனமான Power Finance Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2016
பணி: Deputy Manager (PR) - 01
பணி: Deputy Manager (Technical) - 01
பணி: Deputy Manager (Technical) Green Engery
பணி: Assistant Manager - 02
பணி: Assistant Manager (Technical)
பணி: Assistant Manager - 01
பணி: Officer (MS) - 01
பணி: Officer (Civil Engineering) - 01
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Electrical, Electronics, Instrumentation & Control, Electronics & Communication, Electronics & Tele Communication, Mechanical, Manufacturing, Industrical, production, Power, Engery போன்ற துறைகளில் பிஇ.அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பி.காம், எம்.பி.ஏ, எம்சிஏ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை www.pfcindia.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து எஸ்பிஐ வங்கியில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pfcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.02.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pfcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

Saturday 27 February 2016

டிப்ளமோ தகுதிக்கு பவர் கிரிட் நிறுவனத்தில் பணி

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 19 இளநிலை அதிகாரி, இளநிலை டெக்னீசியன் டிரெய்னி மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 19
பணி: டிப்ளமோ டிரெய்னி (சிவில்) - 01
பணி: டிப்ளமோ டிரெய்னி (டெலிகாம்) - 01
பணி: ஜூனியர் அதிகாரி டிரெய்னி (HR)  - 01
பணி: ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) - 12
பணி: உதவியாளர் (நிதி) - 04
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளதமான www.powergridindia.com என்ற இணையதளத்தில் career பிரிவில் Job opportunities பிரிவில் சென்று முழுமையான விவரங்களை அறிந்த பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016
வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.powergridindia.com/_layouts/PowerGrid/WriteReadData/file/career/nr2/2016/2/NR2_Recruitment_Detailed_Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Thursday 25 February 2016

தேசிய தொலை உணர்வு மையத்தில் பட்டதாரி & தொழில்நுட்ப பயிற்சி

தேசிய தொலை உணர்வு மையத்தில் பல்வேறு துறைகளில் 2016 ஆண்டுக்கு அளிக்கப்பட உள்ள 47 பட்டதாரி பயிலுநர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.NRSC.RMT.01/2016 தேதி: 15.02.2016
1. பட்டதாரி பயிலுநர் (BE, B.Tech & BLISc.) - 17
2. தொழில்நுட்பவியலாளர் பயிற்சி (டிப்ளமோ) - 30
கல்வி தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல் & எல்க்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். நூலக அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 06.03.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nrsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://218.248.0.109:1895/erechomepage/%28S%28i1ppbwrn23n4kh2df4abdjap%29%29/pdf.aspx?ADID=20160211111047 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tuesday 23 February 2016

ESIC மருத்துவ கல்லூரி பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத், சனத் நகரில் செயல்பட்டு வரும் ESIC மருத்துவ கல்லூரியில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Professor - 06
பணி: Associate Professor - 17
பணி: Assistant Professor - 23
பணி: Tutor - 14
பணி: Senior Residents - 15
பணி: Junior Residents - 27
கட்டணம்: 225
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று நேர்முக தேர்விற்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு குழு நடத்தும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://esic.nic.in/backend/writereaddata/recruitment/04f2d5023b7d8caf3497358e71efcd8a.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Sunday 21 February 2016

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: திருச்சியில் மார்ச் 6-இல் நேர்முகத் தேர்வு

ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் இயந்திர இயக்குநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
 இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் இயந்திர இயக்குநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், இரண்டு ஆண்டு பணி அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 22 வயது முதல், 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில், தகுதி அனுபவத்திற்கேற்ப ஊதியம், இருப்பிடம், இலவச விமான பயணச்சீட்டு, அந்நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப சலுகைகளும் அளிக்கப்படும்.
 எனவே இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உடைய இளைஞர்கள் தங்களது அசல் கடவுச்சீட்டு, சுய விவரக் குறிப்புகள் அடங்கிய விண்ணப்பம், புகைப்படம் ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மன்னார்புரம்) மார்ச்-6 ஆம் தேதி காலை 9 மணிமுதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தவறாமல் பங்கேற்றுப் பயனடையலாம்.
 இது தொடர்பான விவரங்களுக்கு 044-22505886, 22502267 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது www.omcmanpower.com என்ற நிறுவன இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

Saturday 20 February 2016

NCHMCT நிறுவனத்தில் 7667 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய கவுன்சில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி என அழைக்கப்படும் National Council of Hotel Management & Catering Technology (NCHMCT) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 7667 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 7667
பணி இடம்: இந்தியா முழுவதும்
பணி: B,Sc. Hospitality & Hotel Administration Program Admission
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 22க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 25க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
"JEE CELL" National Council for Hotel Management and Catering Technology,
A-34, Sector 62, Noida - 201309
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2016
எழுத்துத்த தேர்வு நடைபெறும் தேதி: 30.04.2016 அன்று காலை 10 - 1 மணி வரை
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://applyadmission.net/nchmjee2016/JeeBrochure2016-Eng.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Friday 19 February 2016

இந்திய ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலையில் 6911 பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ தளவாடங்களின் தொழிற்சாலையில் காலியாக உள்ள 6911 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indian Ordnance Factories (IOF)
மொத்த காலியிடங்கள்: 6911
பணியிடம்: கொல்கத்தா
பணி: Junior Works Manager (Technical)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
(i) Mechanical (Including IT,Optical, Electronics & Plastics trades) - 448
(ii) Electrical  - 613
(iii) Civil - 200
(iv) Metallurgical - 328
(v) Chemical (Including Environmental Science &Technology, Rubber & Polymers trades)  - 1046
(vi) Clothing - 212
(vii) Leather - 31
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் & பிளாஸ்டிக், மெட்டாலர்ஜிக்கல் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். வேதியியல், பேஷன்ஸ் டெக்னாலஜி, மெட்டாலர்ஜிக்கல், கார்மண்ட் உற்பத்தி அல்லது கார்மண்ட் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://ofbindia.gov.in என்ற அதிகீரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:01.03.2016

Thursday 18 February 2016

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஏஎஸ்ஐ பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) காலியாக உள்ள  229 ஏ.எஸ்.ஐ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கில சுருக்கெழுத்து முடித்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Sub Inspector (Stenographer)
காலியிடங்கள்: 229
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
வயது வரம்பு: 01.03.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
டெக்னிக்கல் தகுதி: சுருக்கெழுத்தில் 10 நிமிடத்தில் 80 வார்த்தைகள் எழுதி அதனை கணினியில் ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும் அல்லது இந்தியில் 65 நிமிடத்திற்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதி: ஆண்கள் 165 செ.மீட்டர் உயரமும், சாதாரண நிலையில் 77 செ.மீட்டர் மார்பளவும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீட்டரும், உயரத்திற்கேற்ற எடை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதனை www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016

Wednesday 17 February 2016

கரூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பணி

கரூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி தமிழ்நாடு பொது சார்நிலை பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணி ஆகியவற்றில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யும் பொருட்டு தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இனச்சுழற்சி அடிப்படையில் தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றொப்பத்துடன் (Self Attestation)  இணைத்து பதிவு அஞ்சலில் (ஒப்புகை அட்டையுடன்) அனுப்ப வேண்டும். 
சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி தேர்வுக்கு இந்நீதிமன்ற இணையதளத்தள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவோர் மட்டும் நேரில் கலந்துகொள்ளவும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.1/2016
பணி: முதுநிலை கட்டளைபணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பணி: ஜெராக்ஸ் ஆபரேட்டர் - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குவதில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியடன் இலகு ரக வாகனம் ஓட்டுநர் உரிமம் நடைமுறையில் இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் நடைமுறையில் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று அவை நடைமுறையில் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இரவுக் காவலர் - 03
சம்பளம்: மாதம் ரூ.4,800 = 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி: மசால்ஜி - 02
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.02.2016 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
தாந்தோன்றிமலை, கரூர் - 639 007
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://ecourts.gov.in/sites/default/files/Notification%20and%20Application%20both%20tamil%20and%20english_0.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tuesday 16 February 2016

அரியலூர் நகராட்சியில் வருவாய் உதவியாளர், காவலர், துப்பரவாளர் பணி

அரியலூர் நகராட்சியில் காலியாக உள்ள வருவாய் உதவியாளர், மார்கெட் காவலர் மற்றும் துப்பரவு பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ந.க.எண். 118/2016/சி1 தேதி: 04.02.2016 
பணி: வருவாய் உதவியாளர் - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
பணி: அலுவலக உதவியாளர் - 01
தகுதி: 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்
பணி: மார்கெட் காவலர்  - 01
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்
பணி: துப்பரவு பணியாளர் - 02
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்ச வயது வரம்பில்லை. குறைந்டபட்சம் 20 வயது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2016

Monday 15 February 2016

இந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் சர்ஜன் பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Surgeon (Assistant Commandant/Veterinary).
காலியிடங்கள்: 13
தகுதி: Veterinary Science, Animal Husbandry பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Veterinary கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் 157.5 செ.மீட்டர் உயரமும், மார்பளவு (சாதாரண நிலை) 77 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீட்டரும், பெண்கள் 142 செ.மீட்டர் உயரமும் அதற்கேற்ற எடையும் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மருத்துவ பரிசோதனை, உடற்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சலில் விண்ணப்பிக்க  விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மற்றும் தபாலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday 14 February 2016

ஊட்டி ராணுவ கல்லூரியில் கிளார்க், சமையலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் லோயர் டிவிசன் கிளார்க், எம்டிஎஸ், சமையலர், முடிதிருத்துநர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: லோயர் டிவிசன் கிளார்க் - 02சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பல்நோக்கு பணியாளர் - 02 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
வயது: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
பணி: சமையலர் - 02 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: முடிதிருத்துநர் - 02சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
வயது: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பார்பர் டிரேடில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Records The Madras Regiment,
Wellington,
The Nilgiris District,
PIN: 643 231.
Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.02.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday 13 February 2016

HARTRON நிறுவனத்தில் 34 டெக்னீசியன் பணி

அரியானா மாநில இயந்திரவியல் மேம்பாட்டுக் கழகத்தில் (HARTRON) காலியாக உள்ள 34 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளலாம்.
பணி - காலியிடங்கள் விவரம்:
1 . Project Manager (Ser) - 01
2 . Project Manager - 01
3. Software Architect  - 01
4. IT Operations Manager  - 01
5 .Sr.Database Analyst  - 01
6. Sr.Security Analyst - 01
7. Business Analyst - 06
8 .Database Analyst - 01
9. System Administrator - 01
10. Software Developer (PHP)  - 03
11. Software Developer (Java)  - 02
12. Software Developer (Android) - 02
13. Security Analyst  - 04
14. Business Analyst cum UAT Expert - 01
15. Application development Manager - 02
16. Sr.Software Developer (Android, PHP-MySQL, .Net, ) - 06
நேர்முகத் தேர்விற்கு வரும்போது தங்களைப் பற்றிய 2 சுயவிவர குறிப்பு (Resume), 2 சுய சான்று செய்யப்பட்ட புகைப்படம், இரு பணி அனுபவ சான்றிதழ் மற்றும் கடைசியாக பெறப்பட்ட அசல் சம்பள சான்றிதழ்கள் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hartron.org.in/images/SDG/2016/FinalizedJD.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday 12 February 2016

அரசு துறைகளில் 18953 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 18953 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, விண்ணப்பிப்பதற்கான விவரங்கள் அல்லது இணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
கனரா வங்கியில் 74 சிறப்பு அதிகாரி பணிகனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 74 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 74
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.02.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.canarabank.com/Upload/English/Content/RP-3-2015%20-%20Specialist%20Officers%20-%20Corrigendum%20-%20Web%20publication.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிசென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்டம், நிதியியல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 02
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2016
மேலும் விவரங்கள் அரிய http://chennaimetrorail.gov.in/CMRL_HR_01_2016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் பணிதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்ஜி உள்ளிட்ட 24 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Application_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தேசிய அனல் மின் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிதேசிய அனல் மின் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்டிபிசி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எக்ஸ்யூட்டிவ் டிரெய்னி, உதவி வேதியியல் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 96
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.02.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.ntpc.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
திருச்சி ஆவின் நிறுவனத்தில் பணிதமிழ்நாடு ஆவில் நிறுவனத்தின் திருச்சி கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 27
பணி இடம்: திருச்சி பெரம்பலூர், அரியலூர், கரூர்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/try3.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பணிதர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 12
ரெக்கார்டு கிளார்க் - 03, அலுவலக உதிவியாளர் - 07, மசாலஜி - 02
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/CJM%20Court.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு மின் ஆய்வுத்துறையில் அலுவலக உதவியாளர் பணிதமிழ்நாடு மின் ஆய்வுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 001/E3/2016  தேதி: 27.01.2016
மொத்த காலியிடங்கள்: 07
பணி: அலுவலக உதவியாளர்
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி இடம் மற்றும் காலியிடங்கள்: 
Chennai (HO) - 03
Coimbatore - 01
Erode - 01
Palldam - 01
Virudhunagar - 01
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.02.2016
விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை மின் ஆய்வுத்துறை இணையதளமான www.tnei.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி
திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் டெக்னிக்கல் உதவியாளர், எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 07
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.02.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.bdu.ac.in/iecd_teaching_non_teaching_positions.php என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி இந்திய அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் தமிழ்நாடு கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள்:
1. Fitter - 04
2. Turner - 08
3. Machinist - 06
4. Electrician - 05
5. Welder (G&E) - 03
6. Electronic Mechanic - 01
7. Instrument Mechanic - 03
8. Mechanic R & A/C - 01
9. Carpenter - 01
10. PASAA - 04
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igcar.ernet.in/recruitment/Advt_IGC_TA.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கிண்டி ஐ.டி.ஐ-யில்  பணிமனை உதவியாளர் பணிசென்னை, கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசினர் தொடர் அறிவுரை மையம் ஆகியவற்றில் காலியாகவுள்ள பணிமுனை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பணிமனை உதவியாளர் COPA (Computer Operator & Programming Assistant)பணி: பணிமனை உதவியாளர் Fitter (MARC - Mechanic Refrigerator and Air Condifioning)
பணி: பணிமனை உதவியாளர் MARC (Mechanic Refrigerator and Air Condifioning)
பணி: பணிமனை உதவியாளர் Cutting & Tailoring) மகளிர் மட்டும்
விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது பெயர், கல்வித்தகுதி, தொழிற்நுட்ப கல்வி, சாதி விவரம், முன் அனுபவ விவரம், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை வருகின்ற 10.02.2016-க்குள் முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை - 32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் பணி: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழ்நாடு மருத்துவ  சார்நிலைப்  பணியில்  காலிப்  பணியிடங்களை  நிரப்பிட  தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அறிவிப்பு தமிழ்நாடு  மருத்துவத் துறையில் சார்நிலைப் பணியில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு, மருத்துவப்  பணியாளர் தேர்வு வாரியத்தால் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
இப்பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்புகள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி  வெளியீடு எண்: 074 தேதி: 03.02.2016
பதவியின் பெயர்: EEG / EMG Technician -12
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Audio Metrician - 17
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Prosthetic Craftsman - 64
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Occupational Therapist - 18
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Pharmacist - 333
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
பதவியின் பெயர்: Dark Room Assistant - 234
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
பதவியின் பெயர்: Lab.Technician Grade-II  - 524
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
தேர்வு வாரியத்தின் இணையதள முகவரியான ”www.mrb.tn.gov.in”-ல் ’Notification’ பகுதியில் வெளியிடப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் பணிஇந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 7 Lower Division Clerk (LDC) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். ICAR-CTRI-LDC-2-01/2016
பணி: Lower Division Clerk (LDC)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தொலைதொடர்புத் துறையின் சென்னை மண்டலத்தில் உதவியாளர் பணிமத்திய அரசின் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Personnel Assistants - 02
பணி: Junior Accountants - 06
பணி: Stenographer - 03
பணி: Lower Division Clerks (LDC) - 14
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccatn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

327 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 327 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சத்துணவு அமைப்பாளர்
காலியிடங்கள்: 327
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. பழங்குடி பிரிவினர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின் படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சத்துணவுப் பிரிவு) அல்லது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களுக்கு சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.02.2016
சென்னை ஐ.ஐ.டி.யில் பல்வேறு பணிஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தின் சென்னையில் மையத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத 70 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.  Superintending Engineer - 01
2.  Deputy Registrar - 02
3.  Assistant Registrar -  02
4.  Medical Officer - 03
5.  Technical Officer - 02
6.  Physical Education Officer - 01
7.  Junior Superintendent: - 04
8.  Junior Engineer - 01
9.  Junior Technical Superintendent - 09
10. Junior Technician - 17
11. Junior Assistant - 16
12. Security Guard - 12
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
மேலும் கல்வித்தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iitm.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பதிவுத்துறையில் ஓட்டுநர் பணிசென்னை பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி ஓட்டுநர்  - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம்
வயதுவரம்பு: 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியின் மூலம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்று மோட்டார் வாகன உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், வாகனம் ஓட்டுவதில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்பப வேண்டிய அஞ்சல் முகவரி:
பதிவுத்துறைத்தலைவரின் நேர்முக பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம்,
எண்.100, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை- 600028
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.02.2016
டிப்ளமோ முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணிநீர்வழி மற்றும் ஆகாய வழிகள் மூலம் நமது சர்வதேச நீர் எல்லைகளைக் காப்பதில் பெரும் பங்கு வகித்து வரும் கடலோரக் காவல் படையின் (இந்தியன் கோஸ்ட் கார்டு) யாந்திரிக் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புதமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு வங்கியின் துணை விதி மற்றும் அரசு விதிகளின்படியும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம்  தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல் பெற்று பணி நியமனம் செய்யப்பட உள்ளது.  மேலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும்
கீழ்க்காணும் தகுதிகள் பெற்ற மற்றும் கீழ்க்கண்ட இனத்துக்குரிய முன்னுரிமை/முன்னுரிமையற்ற பிரிவை சேர்ந்த இந்தியக் குடியுரிமையுடைய ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15/02/2016 பிற்பகல் 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
பதவி: உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
மேலும் விவரங்கள் அறிய www.taicobank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

UPSC -யில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 112 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: சிவிலியன் மெடிக்கல் அதிகாரி - 49
பணி: பேராசியிர் (சைக்கியாட்ரி)  - 26
பணி: பேராசிரியர் (என்டோக்ரைனாலஜி) - 09
பணி: பேராசிரியர் (கேஸ்ட்ரோ- என்ட்ராலஜி) - 08
பணி: உதவி பேராசிரியர் (பிளாஸ்டிக் சர்ஜரி) - 08  இதர பிரிவுகளில் சேர்த்து மொத்தம் 112 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

2016ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5013 பணியிடங்கள்
2016 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 பணியிடங்க‌ள் வரும் ஆண்டில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான திட்ட அறிக்கையை தேர்வாணையத்தின் தலைவர் கே.அருள்மொழி இன்று (ஜன.29) வெளியிட்டார்.
தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித்துறையில் 5 அதிகாரி பணியிடத்தில் 5 காலியிடங்களும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 பணியிடமும், குருப் 4 பிரிவில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் கனமழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. அவற்றிக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பதவி ஏற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, 6 ஆயிரத்து 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும், இந்த ஆண்டு குருப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர் பணியிடங்களும், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 1 மாவட்டப் பதிவாளர் உட்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடமும் நிரப்பப்பட உள்ளன.
இந்த ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பல்வேறு காலியிட விவரங்கள் வர வேண்டி உள்ளது என்று கூறினார்.
மேலும், புதிய திட்ட அறிக்கையை விவரங்களை அறிய தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மத்திய ஜவுளித்துறையில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய அரசின் ஜவுளித்துறையின் செயல்பட்டு வரும் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி-யில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் கிளார்க் பணிக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 15
பணி: Accountant Groub - B
பணி: Lower Division Clerk - Group-C
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.textilescommittee.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கால்நடை தீவன ஆராய்ச்சி மையத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஇந்திய கால்நடை தீவன ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள எல்டிசி பணிக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Adv.No.: 02/2015-Rectt.cell
பணி: Lower Division Clerk - 14
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.igfri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
அணுசக்தி தாதுக்கள் ஆராய்ச்சி கழகத்தில் 146 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணுசக்தி தாதுக்கள் ஆராய்ச்சி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 146 டெக்னிக்கல் அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், ஸ்டெனோகிராபர், டெக்னீசியன், அப்பர் டிவிஷன் கிளார்க், ஓட்டுநர், ஒர்க் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி கார்டு போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 146
1. டெக்னிக்கல் அதிகாரி
2. ஆராய்ச்சி உதவியாளர்
3. ஸ்டெனோகிராபர்
4. டெக்னீசியன்
5. அப்பர் டிவிஷன் கிளார்க்
6. ஓட்டுநர்
7. ஒர்க் அசிஸ்டன்ட்
8. செக்யூரிட்டி கார்டு
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.amd.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
டிஆர்டிஓ ஆராய்ச்சி மையத்தில் 1142 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தில் (டிஆர்டிஓ) இந்த ஆண்டு 1142 பணியிடங்களுக்கான செப்டம் தேர்வுக்கான (CEPTAM-08) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்
பணி: டெக்னீசியன்
பணி: நிர்வாரகம் மற்றும் இதர பணிகள் - 233
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in அல்லது http://www.drdo.gov.in/drdo/ceptam/advt-ceptam-08-advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ரயில்வே பாதுகாப்பு படையில் 2030 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புசெகேந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.), ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்.) போன்ற போலீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள 2030 கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான இந்திய குடியுரிமை பெற்ற பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2030
பணி: கான்ஸ்டபிள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.scr.indianrailways.gov.in  அல்லது www.rpfonlinereg.in  என்ற இணையதளங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
146 உதவி, ஸ்டெனோ, கிளார்க், தொழில்நுட்பவியலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஇந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் அணு மினரல்ஸ் டைரக்ட்டரேட் (AMD) நிறுவனத்தில் காலியாக உள்ள 146 உதவி, ஸ்டெனோ, கிளார்க், காவலர், தொழில்நுட்பவியலாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை: www.amd.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.amd.gov.in/misc/amd_advt_online_2016/amd/002DETAILED%20ADVERTISEMENT%20-%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
யுரேனிய கழகத்தில் மேலாண்மை டிரெய்னி பணிஇந்திய யுரேனியக் கழகத்தில் (Uranium Corporation of India Limited (UCIL)) மேலாண்மை டிரெய்னிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (Accounts) - 01
பணி: Chief Manager (Accounts) - 01
பணி: Manager (Accounts) - 01
பணி: Assistant Manager (Accounts) - 01
பணி: Assistant Manager (EDP) - 02
பணி: Management Trainee (CRD) - 01
பணி: Management Trainee (Personnel) - 01
பணி: Management Trainee (Accounts) - 01
பணி: Management Trainee (Environment Engineering) - 01
பணி: Management Trainee (Control Research & Development) - 01
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2016.
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இஇஜி தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள இஇஜி, இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
இஇஜி இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர்களாக 12 பேரும், ஆடியோமெட்ரிசியன்களாக 17 பேரும், பிராஸ்தடிக் கிராஃப்ட்ஸ்மேன்களாக 64 பேரும், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டுகளாக 18 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
w‌w‌w.‌m‌rb.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளத்தின் மூலமே பிப்ரவரி 10-க்குள் விண்ணப்பிக்க முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரி பதவிஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Junior Officer
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.irdai.gov.in/ADMINCMS/cms/frmGeneral_Layout.aspx?page=PageNo2730&flag=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
சிஆர்பிஎஃப்-ல் 229 சப்-இன்ஸ்பெக்டர் பணிமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) காலியாக உள்ள 229 சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி துணை ஆய்வாளர் (ஸ்டெனோ) Assistant Sub Inspector (Steno)விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_34_1516b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
புலனாய்வு துறையில் 69 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புலனாய்வு துறையில் காலியாக உள்ள 69 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்லது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Personal Assistant
காலியிடங்கள்: 69
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mha.nic.in/sites/upload_files/mha/files/DETAILEDADVERTISEMENT-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இளநிலை பயிற்சி அலுவலர் பணி2014 - 2015 ஆம் ஆண்டுக்கு தமிழக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக பூர்த்தி செய்ய பிப்ரவரி.1 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பயிற்சி அலுவலர் (Junior training officer)
காலியிடங்கள்: 329
தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி  மற்றும் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://skilltraining.tn.gov.in/empowerjtst/pdf/jto_notification_tamil.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புசென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்..001/PR33/2016,  தேதி: 13.01.201
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 45
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 75
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/JA-ADV-2016.pdf என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.
தமிழ் நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பணிதமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டி.என்.பி.எல்) நிர்வாக பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager (IT) - 01
பணி: Manager (Finishing House - 01
பணி: Management Trainee(R & D and QC) - 12
பணி: Management Trainee (Plantation) - 04கல்வித் தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., விவசாயத்துறையில் பி.எஸ்சி., அக்ரிகல்சர் அல்லது ஹார்டிகல்சர் அல்லது பாரஸ்ட்ரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2021jan2016.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மத்திய அரசு துறைகளில் 60 அதிகாரி பணி: யூபிஎஸ்சி அறிவிப்புமத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 60 அதிகராரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டன்ட் டைரக்டர் (காஸ்ட்)
பணி: துணை ஆர்கிடெக்ட் (சி.பி.டபுள்யு.டி.)
பணி: அசிஸ்டன்ட் ஆர்கிடெக்ட் (சி.பி.டபுள்யு.டி.)
பணி: அசிஸ்டன்ட் ஆர்கிடெக்ட் (குடும்ப நலத்துறை)
தகுதி: சி.ஏ. மற்றும் ஆர்கிடெக்சர் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.