Showing posts with label CLerk. Show all posts
Showing posts with label CLerk. Show all posts

Wednesday, 21 October 2015

நைனிடால் வங்கியில் கிளார்க் பணி

நைனிடால் வங்கியில் நிரப்பப்பட உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: நைனிடால் வங்கி (NBL)
பணி: கிளார்க்
காலியிடங்கள்: 30
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், முதுலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.09.2015 தேதியின்படி 18 - 37க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31540
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை NTB Recruitment A/C Clerks-2015, கணக்கு எண். 0011000000000658, IFSC Code:  NTBL0NAI001 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nainitalbankcareer.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nainitalbank.co.in/pdf/ADVERISEMENT-Recruitment-Clerks.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 16 January 2015

விஜயா வங்கியில் கிளார்க் பணி

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 8 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிளார்க்
காலியிடங்கள்: 08
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7,200 - 19,300
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. SC,ST பிரிவினருக்கு ரூ.50. இதனை பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் “Vijaya Bank, Recruitment (Sportsmen) Project, 2015" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.vijayabank.com/UserFiles/vijayabank/file/Santhosh/Recruitment%20of%20sportspersons%202014-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 11 September 2014

பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பள்ளிகளில் கிளார்க் பணி

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (KVS) பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 08
பதவி கோடு: 64
பணி: Technical Officer
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தகுதி: சிவில், ஆர்க்கிடெக்சர், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி கோடு: 65
பணி: Assistant
காலியிடங்கள்: 81
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் UDC ஆக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

பதவி கோடு: 66
பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 120
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பட்டப்படிப்புடன் மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் LDC ஆக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
பதவி கோடு: 67
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 284
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் குறித்து தெரி்ந்திருத்தல் வேண்டும்.

பதவி கோடு: 69
பணி: Stenongrapher Grade-II
காலியிடங்கள்: 29
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தி அல்லது ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதவும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்ளிமேஷன் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை: ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Saturday, 6 September 2014

கர்நாடகா வங்கியில் எழுத்தர் கிளார்க் பணி

கர்நாடகா மாநிலத்தின் மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கர்நாடகா வங்கியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (கிளார்க்) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கர்நாடகா வங்கி
பணி: கிளார்க்
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.
வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.08.1988 - 01.08.1996 இருதேதிகளும் உள்பட இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் டெஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.20.815 மற்றும் இதர சலுகைகள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. SC,ST பிரிவினருக்கு ரூ.400.
விண்ணப்பிப்பது எப்படி: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.karnatakabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.karnatakabank.com/ktk/Career.jsp# என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 27 August 2014

அரசு வங்கிகளில் கிளார்க் பணியில் சேருவதற்கான IBPS தேர்வு அறிவிப்பு

இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேருவதற்கு Institute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது எழுத்துத்தேர்வு என்ற தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு வருடத்துக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்படும்.
CWE Clerks-IV தேர்வு பற்றிய அறிவிப்பை IBPS அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதவி: Clerical Cadre (CWE Clerks -IV)
வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 18-28க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினியில் அலுவலக பணிகளை செய்வதற்கான கோர்ஸ் படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த மாநிலத்தில் பணியில் சேர விரும்புகிறாரோ அந்த மாநில மொழியில் எழுத, வாசிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழ்நாடு மாநில கோடு எண்: 41
புதுச்சேரி கோடு எண்: 37
தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி,வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, நாகர்கோவில்
விண்ணப்பக் கட்டணம்: SC/ST மற்றும்  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.600. கட்டணத்தை செலுத்துவதற்கான செல்லான் படிவங்களை www.ibps.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து Bank of Baroda, Bank of India, Central Bank of India, Indian Overseas Bank, Punjab National Bank, United Bank of India, Bank of Maharashtra போன்ற 7 வங்கிகளில் ஏதாவதொரு வங்கியில் கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை Debit Card அல்லது Credit Card அல்லது Internet Banking மூலம் ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.

Saturday, 23 August 2014

செளவுத் இந்தியன் வங்கியில் எழுத்தர் பணி

செளவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Probationary Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
பதவி: Probationary Clerk
கல்வித்தகுதி: கலை அல்லது அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பயன் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.12.2013 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது பிரிவினருக்கு ரூ.250.
2. SC/ST பிரிவினருக்கு ரூ.50. இதனை செளவுத் இந்தியன் வங்கியின் பெயரில் கொல்கத்தா மாற்றத்தக்கதாக வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy. General Manager, The South Indian Bank Ltd,
Regional Office- Kolkata, Door No.20 A,
Mother Teresa Sarani (Park Street),
1st Floor, Flat No.1, Kolkata- 700016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.southindianbank.com/UserFiles/file/website%20Sikkim.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.