Thursday 30 April 2015

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆயுத தொழிற்சாலையில் பணி

மகாராஷ்டிர மாநிலம், புனேயில் செயல்பட்டு வரும் இராணுவ தொழிற்சாலையில் காலியாக உள்ள MTS பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, தொழிற்திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை  The General Manager, Ordnance Factory, Dehu Road, Pune-412101 என்ற டி.டி அல்லது போஸ்ட் ஆர்டராக எடுத்து செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ofdr.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவாயான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Wednesday 29 April 2015

HMT நிறுவனத்தில் மேலாளர் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் HMT நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள AGM, DGM, JGM பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: AGM (F), DGM(F), JGM(F)
தகுதி: ICWA, CA முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரு.16,000 - 20,800
பணி: Manager (HR, AGM(HR), DGM(HR)
தகுதி: MSW, MBA (HR), NIPM, PGDPM போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,000 - 18,250
பணி: Chief Security Officer
தகுதி: இந்திய இராணுவம், துணை ராணுவ படைகள் போன்றவற்றில் அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,600 - 14,600
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை HMT Machine Tools Limited, Bangalore என்ற பெயருக்கு டி.டி எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR),
HMT Machine Tools Limited,
HMT Bhavan,
No: 59, Bellary Road,
Bangalore - 560032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015
மேலும் பணி வாரியான காலியிடங்கள், தேர்வு முறைகள், வயதுவரம்பு சலுகைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://hmtindia.com/html/Extranal_Recruitment_Advt_2014.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday 28 April 2015

பெல் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Management Industrial Trainees  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Industrial Trainees 
காலியிடங்கள்: 03
தகுதி: ICWAI (Inter) முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சியின் போது வழங்கப்படும் ஊதவித்தொகை: மாதம் ரூ.7,500
பயிற்சி காலம்: 1 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அஞ்சல், கூரியர், இ-மெயில் மூலமாக விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy.Manager (HR)/BEL,
Post Box No.26,
Ravindranath Tagore, Machilipatnam-521001
E-mail: hrmc@bel.co.in
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015

Monday 27 April 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸில் பணி

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸில் நிரப்பப்பட உள்ள Research Intern (Under CSIR Diamond Jubilee Research Intern Scheme) பணிக்கு 29 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம்.
விளம்பர எண்: IN/03/2015
பணி: Research Intern (Under CSIR Diamond Jubilee Research Intern Scheme)
காலியிடங்கள்: 01
தகுதி: EEE, E&I, Computer Science போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: மாதம் ரூ.15,000
கால அளவு: அதிகபட்சமாக 2 வருடங்கள் ஆராய்ச்சி பணி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 29.04.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.04.2015 அன்று காலை 9.30 மணிக்கு
நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுபவர்கள் www.csircms.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவ மாதிரியை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, அதனுடன் கல்வித்தகுதி, அனுபவம், சாதி சான்றிதழ்கள் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.csircms.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday 26 April 2015

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பாதுகாப்பு பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 18 பாதுகாப்பு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Jr.Supervisor (Security)
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ராணுவத்தில் 15 வருடம் பணியாற்றியிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10050 - 25450 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Havildar (Security)
காலியிடங்கள்: 14
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 15 வருடம் ராணுவத்துறைகளில் பணியாற்றியிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,330 - 22,000 + இதர சலுகைகள்.

பணி: Jr. Lady Searcher
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் + 3 வருடம் ராணுவம் அல்லது உ.பி காவல் துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
D.G.M (HR) Bharat Electronics Limited, Bharat Nagar Post, Sahibabad Ghaziabad-201010 U.P.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/sites/default/files/Recruitments/SEC-detail-WEB.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday 24 April 2015

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளர் பணி

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (HEC) நிறுவனத்தில் காலியாக உள்ள 36 மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RT/10/2015
தேதி: 06.04.2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Sr.Manager (Technical) - 11
2. Sr.Manager (Non-Technical) - 02
சம்பளம்: மாதம் ரூ.32,900 - .58.,000
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 17 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. Manager (Technical) - 08
4. Manager (Non-Technical) - 03
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 13 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. Dy.Manager  (Technical) - 09
6. Dy.Manager  (Non-Technical) - 03
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 9 வருடம் அனுபவம் பெற்றிருக்க் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The SDGM (P)/ Recruitment Section, Personnel & Administration Division, Hqrs, HEC Ltd, Plant Plaza Road, Dhurwa, Ranchi-834004, Jharkhand
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.05.2015
மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற விண்ணப்பத்தாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.hecltd.com/download/jobs/RT-10-2015_Detailed%20Advt-MLO-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday 23 April 2015

சிமென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிமென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (CCI)  நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/15
பணி: Management Trainees
காலியிடங்கள்: 07
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
H.R - 02
Finance - 02
Marketing - 01
Chemical/ Production - 02
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம், பொறியியல் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30.04.2015 தேதியின்படி 28 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
விண்ணப்ப கவரின்மீது “Application for Management Trainee _______ Discipline” என்று எழுத வேண்டும்.
The Manager(Personnel), Cement Corporation of India Ltd, Post Box No. 3061, Lodhi Road Post Office, New Delhi-110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cementcorporation.co.in/UserFiles/files/ADVT_%2001-15%20mt-ADVT%282%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday 22 April 2015

மத்திய குடிநீர் வாரியத்தில் உதவியாளர் பணி

அஸ்ஸாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள மத்திய குடிநீர் வாரியத்தில் காலியாக உள்ள குடிநீர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/22/Recruitment/WC/2015/401-04 தேதி: 21.03.2015
பணி: Skilled Work Assistant (Post Code: SWA)
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cwc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பம் போன்று விண்ணப்பம் தயார் செய்து தேவையான அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE SUPERINTENDING ENGINEER, HYDROLOGICAL OBSERVATION CIRCLE, CENTRAL WATER COMMISSION, CWC COMPLEX, BEHIND ADABARI BU STAND, GUWAHATI-781014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cwc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday 21 April 2015

ஐடிஐ தகுதிக்கு தேசிய கனிம மேம்பாட்டு கஐடிஐ தகுதிக்கு தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் பணிழகத்தில் பணி

பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் (NMDC)  காலியாக உள்ள 138 Maintenance Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Maintenance Assistant
காலியிடங்கள்: 138
மெக்கானிக்கல் - 114
எலக்ட்ரிக்கல் - 24
தகுதி: பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், டர்னர், டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரிக்கல், ஷீட் மேக்கிங் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சியின்போது வழங்கப்படும் உதவித்தொகை: மாதம் ரூ.11,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை  Jt.G.M.(Finance), BIOM, Kirandul Complex, Kirandul என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
விண்ணப்ப கவரின் மீது “APPLICATION FOR THE POST OF :__________________ DISCIPLINE________________CATEGORY:_______;” என்று எழுதி
Deputy Manager (personal)R&P, Bailadila Iron Ore Mine, Kirandul Complex, Post. Kirandul, Dist. South Bastar Dantewara, (Chattisgarh) என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/Docs/Careers/Employ%20Noti%20English%202-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday 20 April 2015

பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ஓரியண்டல் வங்கியில் பணி

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியில் நிரப்பப்பட உள்ள 22  Peon-Cum-House Keeper பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: ராய்பூர்
சம்பளம்: மாதம் ரூ.7000 - 24,240 + தர ஊதியம் ரூ.2280
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.obcindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Post Box No. 11,
Post Office, Main Post Office,
Raipur, Pin -492001.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/Raipur_peon.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday 18 April 2015

இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் உதவியாளர் பணி

இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் (INSA) தில்லியில் காலியாக உள்ள 6 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரோஜ்கார் சமாச்சார் வெளியிட்டுள்ளது.
பணி: Assistant-I
காலியிடங்கள்: 03
தகுதி: பட்டம் மற்றும் அலுவலக மேலாண்மையில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant-I (Finance & Accounts)
காலியிடங்கள்: 01
பட்டம் மற்றும் நிதியியல், கணக்கியல் துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant-I (Archive)
காலியிடங்கள்: 01
தகுதி: பட்டம் மற்றும் Archives, Records பிரிவில் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ,9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant-II
காலியிடங்கள்: 01
தகுதி: பி.காம், பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் ஆங்கில தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ,5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
To the  Assistant Executive Director-I (Finance & Administration), Indian National Science Academy, Bahadur Shah Zafar Marg, New Delhi-110002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.05.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.insaindia.org/vacancy_2015.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday 16 April 2015

பாரத ஸ்டேட் வங்கியில் 2393 அதிகாரி பணி

அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாக செய்துவரும் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 2393 Probationary officer (PO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/PO/2015-16/02
நிறுவனம்: State bank of India (SBI)
மொத்த காலியிடங்கள்: 2000 + 393
பணி: Probationary officer (PO)
பிரிவு வாரியான காலியிடங்கள் விரம்:
SC – 308
ST – 339
OBC – 541
GEN – 812
Backlog Vacancies:
SC – 67
ST – 219
OBC – 107
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் 01.09.2015 தேதிக்கு முன்பு  தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.04.1985 முதல் 01.04.1994க்குள் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோயமுத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலும், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2015
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:02.05.2015
மேலும் சம்பளம், தேர்வு விவரங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/portal/documents/44978/7348676/SBIPO-2015-Full+English+Advertisement.pdf/fa1e559b-0504-4df6-9d11-534790f1dd95 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday 15 April 2015

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி & பொறியாளர் பணி

இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் ஹைதராபாத் பாலாநகரில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் National Remote Sensing Centre-ல் காலியாக உள்ள விஞ்ஞானி மற்றும் பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: NRSC.RMT/2015
தேதி: 28.03.2015
பணி: Scientist/Engineer 'SD'
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
தகுதி: Oceanography(Physical) Physics/Geophysics/Ocean Atmospheric Science & Technology-ல் எம்.எஸ்சி அல்லது எம்.டெக் முடித்து Oceanography-ல் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer 'SD'
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
தகுதி: Physics, Atmospheric Science, Climate Science-ல் எம்.எஸ்சி அல்லது எம்.டெக் முடித்து Atmospheric Chemistry-ல் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Library Assistant-A
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 35, ஓபிசி பிரிவினருக்கு 38, எஸ்சி பிரிவினருக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தகுதி: முதல் வகுப்பில் நூலக அறிவியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nrsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nrsc.gov.in/pdf/CA_2015_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

Tuesday 14 April 2015

சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட கிளார்க் பணி

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள  Law Clerks  பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்
பணி: Law Clerks
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்று இந்திய பார் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7,500 - 25,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar General, High Court, Madras-600 104
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hcmadras.tn.nic.in/lawclerknotf2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday 13 April 2015

தூத்துக்குடி துறைமுகத்தில் உதவி மேலாளர் பணி

தமிழ்நாடு, தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள உதவிமேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Estate Manager Grade-I
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Architecture/Town and Country Planning பிரிவில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Chief Manager, V.O.Chidamparanar Port Trust, Tuticorin - 628004.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.vocpt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday 11 April 2015

தில்லி கமலா நேரு கல்லூரியில் 36 உதவி பேராசிரியர் பணி

தில்லி கமலா நேரு கல்லூரியில் காலியாக உள்ள 36 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். I/Teaching/2015
தேதி: 17/03/2015
பணி: உதவி பேராசிரியர்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Maths – 03
2. Commerce – 06
3. Hindi – 04
4. Economics – 05
5. English – 05
6. Pol.Science – 04
7. Sociology – 02
8. Environmental Studies – 02
9. Journalism – 01
10. Geography – 01
11. History – 01
12. Philosophy – 01
13. Psychology – 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்று NET/ SLET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: ww.knc.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Principal, Kamala Nehru College, August Kranti Marg, New Delhi 110049
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.knc.edu.in/wp-content/uploads/2013/06/Final-Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday 10 April 2015

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் 1582 குரூப் "டி" பணி

கர்நாடகா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் நிரப்பப்பட உள்ள 1582 குரூப் "டி" பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Department of Health & Family Welfare, Karnataka
காலியிடங்கள்: 1582
பணி: குரூப் "டி"
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,600 - 14,550
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 30.04.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.karhfw.gov.in/drc.aspx என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2015
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.05.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.karhfw.gov.in/PDF/Instructions%20to%20the%20candidates%20%20for%20the%20post%20of%20Group%20D%20-1582.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday 9 April 2015

மத்திய சேமிப்பு கிட்டங்கி கழகத்தில் 21 உதவியாளர் பணி

மினி ரத்னா பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான மத்திய சேமிப்பு கிட்டங்கி கழகத்தின் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் உ.பி, சண்டிகாரில் காலியாக உள்ள 21 உதவியாளர் கிரேடு -II பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Warehouse Assistant Grade-II
காலியிடங்கள்: 12
பொது - 10
எஸ்சி - 05
ஓபிசி - 05
மாற்றுத்திறனாளிகள் - 01
சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் வேகத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டபின் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. இதனை Chandigarh-ல் மாற்றத்தக்க வகையில் Regional Manager, Central Warehousing Corporation, RO,  பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
விண்ணப்ப கவரின் மீது “APPLICATION FOR THE POST OF WAG-II IN CWC CHANDIGARH REGION” என்று எழுதியிருக்க வேண்டும்.
RegionalManager,
Central Warehousing Corporation,
Bay 39-42, Sector 31-A, Chandigarh.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.04.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/test_adv_wag_II_chd_090315.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday 8 April 2015

ராணுவ ஆராய்ச்சிக் கழகத்தில் சயின்டிஸ்ட் பணி

இந்திய பாதுகாப்புத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 117
பணி: விஞ்ஞானிகள்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electronics and Communication Engineering - 06
2. Computer Science and Engineering - 04
3. Mechanical Engineering - 08
4. Aeronautical Engineering - 03
5. Electrical Engineering - 02
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
Scientist`B' பணிக்கு மாதம் ரூ. 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5400
Scientist `C' பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6600
Scientist `D' பணிக்கு மாதம் ரூ.15,600  -39,100 + தர ஊதியம் ரூ.7600
Scientist `E' பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8700
Scientist `F' பணிக்கு மாதம் ரூ.37,400  -67,000 + தர ஊதியம் ரூ. 8900
Scientist `G' பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10000
Scientist `H' பணிக்கு மாதம் ரூ.67000 - 79,000
Distinguished Scientist பணிக்கு மாதம் ரூ.75,500 - 80,000 (HAG+Scale)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 31க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:  http://rac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rac.gov.in/cgibin/2015/advt_117/public/pdf/advt_117.pdf?edb01099483bacbd327895ba1ae43202=1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday 7 April 2015

+2, டிப்ளமோ தகுதிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் விமானங்களில் பயிற்சி விமான பணியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
காலியிடங்கள்: 435
பணி: Trainee Cabin Crew
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 10.04.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
மொழித்திறன்: ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் அந்தந்த பிராந்திய தலைமையகம் அமைந்துள்ள நகங்களில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற விண்ணப்பதார்ரகளின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய  www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday 6 April 2015

புதுச்சேரி அரசு பள்ளிகளில் விரிவுரையாளர் பணி

புதுச்சேரி அரசின்கீழ் காரைக்கால், மாஹியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lecturer
காலியிடங்கள்: 47
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
காரைக்கால்:
1. தமிழ் - 08
2. ஆங்கிலம் - 09
3. இந்தி - 01
4. பிரெஞ் - 01
5. கணிதம் - 04
6. இயற்பியல் - 04
7. வேதியியல் - 03
8. தாவரவியல் - 02
9. விலங்கியல் - 02
10. வணிகவியல் - 04
11. வரலாறு - 03
12. பொருளாதாரம் - 04
மாஹி:
13. வணிகவியல் - 01
14. பொருளாதாரம் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 20.04.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பட்டம், கல்வியியல் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.