|
|
|
|
எஸ்.ஜெ.வி.என். நிறுவனத்தில் டிரெய்னி பணியிடங்கள்
எஸ்.ஜெ.வி.என். நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எக்சிக்யூட்டிவ் டிரெய்னி - 95
கல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ/ பி.டெக். பட்டம்.
வயது: 30-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.09.2013
விவரங்களுக்கு: sjvn.nic.in
|
Showing posts with label daily one message puthiathalai murai news collection. Show all posts
Showing posts with label daily one message puthiathalai murai news collection. Show all posts
Tuesday, 27 August 2013
Latest Jobs in Tamilnadu Employment news 2013
Wednesday, 7 August 2013
இந்தியாவில் 133 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவன அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், சுமார் 133 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவன இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவிக்கும் போது, கடந்த ஓராண்டில் மட்டும் 16 பிரிவுகளில், அதாவது, ஒரு செல் உயிரினம் முதல், மீன், நண்டு, பறவை உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து 133 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, அபூர்வமான, பறக்காத பறவை இனம் ஒன்று அந்தமான் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 66 பூச்சி இனங்களும், 4 சிலந்தி இனங்களும், 2 நண்டு இனங்களும், 19 மீன் இனங்களும், 2 நீர்வாழ் இனங்களும், 2 ஊர்வன இனங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Saturday, 20 July 2013
கத்தியின்றி ரத்தமின்றி நடந்த புரட்சி - Rattaminri kattiyinri the Revolution
நீண்ட காலமாகப் பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழும் சம்பவங்கள் வரலாற்றில் பல முறை நிகழ்ந்திருக்கிறது. பல போராட்டங்கள் வன்முறைகளாக மாறி ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்திருக்கின்றன.
இவற்றுக்கு மாறாக கத்தியின்றி ரத்தமின்றி நடந்த ஒரு புரட்சியை பற்றித் தெரியுமா உங்களுக்கு?
ரோஜா புரட்சி. ரோஜா மலர் உற்பத்தியைப் குறிப்பதல்ல.
முன்னாள் சோவியத் நாடான ஜார்ஜியாவில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு காரணமான எழுச்சிதான் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
எஜுவர்ட் ஷெவர்ட்னேட்ஸ் அந்நாட்டு அதிபராக இருந்தபோது சிட்டிசன்ஸ் யூனியன் ஆப் ஜியார்ஜியா என்ற கட்சியே ஆண்டு வந்தது. ஆனால் அரசின் மீதான மக்களின் அவநம்பிக்கை, செயலற்ற தன்மை என அதிருப்தி பெருகி வரவே 2000மாவது ஆண்டு ஆளும் கட்சியிலிருந்து பலர் பிரிந்து சென்று வெவ்வேறு புதிய கட்சிகளை துவக்கினர்.
Friday, 19 July 2013
உலகம் அறிவோம்: நோபல் பரிசை ஏற்க மறுத்தவர்கள்..the Nobel Prize refuse personalities
![]() |
| jean paul sartre |
திருப்போம். ஆனால் தேடி வந்த உலகின் உயரிய விருதையும் வேண்டாம் என்று மறுத்தவர்கள் வெகு சிலரே.
உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு.
இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அரிய விருதை வாங்க மறுத்தவர்கள் வரலாற்றில் இரண்டே பேர் தான்.
1964 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த எழுத்தாளர் ஜீன் பால் சார்ட்ரேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
தான் எப்போதும் ஒரு எழுத்தாளனாக இருப்பதையே விரும்புவதாகவும், இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட விருதுகளால் நிலை மாறுவதை தான் ஒரு போதும் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
![]() |
| Kissinger-and-Le-Duc |
இதன் மூலம் உலக வரலாற்றில் நோபல் பரிசை மறுத்த முதல் நபரானார் சார்ட்ரே.
இதே போல் 1973 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வியட்நாம் விடுதலை இயக்கத் தலைவர் லே டக் தோவுக்கும், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிசிஞ்சர்க்கும் பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)

.jpg)