Showing posts with label Assistant Sub-inspector. Show all posts
Showing posts with label Assistant Sub-inspector. Show all posts

Monday, 29 December 2014

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கு பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Sub-inspector
காலியிடங்கள்: 79
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Head Constable
காலியிடங்கள்: 97
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களின் விளையாட்டு திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே தெவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை நேர்முகத்தேர்விற்கு வரும்போது கொண்வர வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை IPO-வாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cisf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2015