Showing posts with label Power Jyoti. Show all posts
Showing posts with label Power Jyoti. Show all posts

Tuesday, 27 January 2015

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியாவில் டெக்னிகல் பணி

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியுள்ள இந்தியாவின் கோர் பிரிவைச் சார்ந்த இரும்பு உற்பத்தி நிறுவனமான செய்ல் நிறுவனத்தின் வர்த்தமான் ஆலையில் காலியாக உள்ள ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்:  219
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. மெட்டலர்ஜி - 46
2. மெக்கானிக்கல் - 107
3. கெமிக்கல் - 10
4. எலக்ட்ரிக்கல் - 56
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250ய இதனை பர்ன்பூர் மாற்றத்தக்க வகையில் ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் “Power Jyoti” என்ற பெயரில் 31932241266 என்ற கணக்கு எண்ணில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://sailcareers.com/IISCO என்ற இணையதளத்தை பார்க்கவும்.