Showing posts with label ஆராய்ச்சிப் பணி. Show all posts
Showing posts with label ஆராய்ச்சிப் பணி. Show all posts

Wednesday, 23 July 2014

இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் ஆராய்ச்சிப் பணி

புதுதில்லியில் உள்ள Indian National Science Academy Stipendiary Intern ஆக பணியாற்ற தகுதியும் திறமையுமுள்ள அறிவியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Stipendiary Intern
கல்வித்தகுதி: ஏதாவதொரு அறிவியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி, எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
எம்,எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.20,000 உதவித்தொகை வழங்கப்படும். எம்.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.24,000 வழங்கப்படும். ஒரு வருடம் பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.insaindia.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  THE EXECUTIVE DIRECTOR, INDIAN NATIONAL SCIENCE ACADEMY, BA HADUR SHAHZAFAR MARG, NEW DELHI-110002
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.insaindia.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.