இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையில் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Limited) நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி காலம்: 1 வருடம்
தகுதி: பொறியியல் துறையில் மூன்று வருட டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதி மூன்று வருடங்களுக்குள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.