தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 3–ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26–ந்தேதியும் தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சென்னை,
தமிழ்நாட்டில் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
19¾ லட்சம் பேர்
பிளஸ்–2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் 2 ஆயிரத்து 50 மையங்களில் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து 50 தேர்வு மையங்களில் 11 லட்சத்து 10 ஆயிரம் மாணவ–மாணவிகளும் எழுதுகிறார்கள்.