Showing posts with label இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள் - India's multi-purpose projects. Show all posts
Showing posts with label இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள் - India's multi-purpose projects. Show all posts

Wednesday, 8 January 2014

இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள் - India's multi-purpose projects

* ஒரு திட்டங்களின் மூலம் பல நோக்கங்களை சென்றடைவதே பல்நோக்குத் திட்டங்கள் ஆகும். இவை ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களே ஆகும்.
 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள் - India's multi-purpose projects
* ஒரு ஆற்றுப்பகுதி முழுவதும் ஒரு திட்டத்திற்குரிய பரப்பாகவே கருதப்படுகின்றன. இத்திட்டங்கள் நீர்ப்பாசனம், நீர் வளம், வெள்ளத் தடுப்பு, தொழில் வளம், மண் அரிப்பு தடுப்பு, காடு வளர்ப்பு, மீன் பிடிப்பு, மின் சக்தி் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படுகின்றன.
* ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் நவீன இந்தியாவின் புதிய கோயில்கள் என்று புகழப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களின் முதல் பல்நோக்குத் திட்டமாக
அமைக்கப்பட்ட திட்டம் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் ஆகும். இவை வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் திட்டமாகும்.
தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்
* சோட்டா நாகபுரி பகுதியிலிருந்து மேற்கு வங்காளம் வரை பாய்ந்து வருகிறது தாமோதர் நதி.
* தாமோதர் நதி கோடைக்காலங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை வெள்ளத்தில் மூழ்கச் செய்து வருகின்றன.