Showing posts with label NAVC. Show all posts
Showing posts with label NAVC. Show all posts

Wednesday, 27 August 2014

கடற்படையில் குருப் 'சி' பணி

அந்தமான் நிக்கோபார் தீவுகளை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கடற்படை யூனிட்களில் காலியாக உள்ள 95 குருப் 'சி' பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சிவிலியன் மோட்டார் டிரைவர்
காலியிடங்கள்: 69
சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1900.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: பயர் இன்ஜின் டிரைவர்:
காலியிடங்கள்: 05
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: பயர்மேன்
காலியிடங்கள்: 21
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.