Showing posts with label ITBPF. Show all posts
Showing posts with label ITBPF. Show all posts

Thursday, 19 February 2015

இந்திய துணை ராணுவப் படைகளில் 62,390 கான்ஸ்டபிள் பணி

இந்திய துணை ராணுவப் படைகளான அசாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் போலீஸ் (CRPF), இந்தோ திபெத் எல்லை காவல் படை (ITBPF), சஷாத்ர சீமா பால் (SSB), மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF)படை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள 62,390 கான்ஸ்டபிள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மொத்த காலியிடங்கள்: 62,390. இதில் 8,533 பணியிடங்கள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு 24,588 பேரும், எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 22,517 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்திற்கு 2,138 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20, 200 + தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் தேர்வு ஆணையம், இந்தத் தேர்வை மூன்று கட்டங்களாக நடத்துகிறது. இதில் உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவச் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இறுதித் தேர்வுகள் 04.10.2015 தேதிகளில் நடத்தப்பட்டு அடுத்த வருடம் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.