Showing posts with label Child Development Project Officer. Show all posts
Showing posts with label Child Development Project Officer. Show all posts

Thursday, 18 December 2014

குழந்தை வளர்ப்புத் திட்டத்தில் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குழந்தை வளர்ப்புத் திட்டத்தில் பணிபுரிய விரும்பும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
மொத்த காலியிடங்கள்: 117
பணி: Child Development Project Officer
பணிக்கோடு: 1798
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: Nutrition அல்லது Home Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதாவது அஞ்சல் வழியில் நேரடியாக பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மொத்தம் 570 மதிப்பெண்களைக் கொண்டது.
இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வின் வினாக்கள் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். தாள்-I நீயூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் அல்லது ஹோம் சயின்ஸ் சார்ந்த பாடங்களில் இருந்து 300 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். மூன்று மணி நேரம் எழுத்துத் தேர்வு நடைபெறும். தாள்-II பொது தாள். இதில் 200 வினாக்கள் கேட்கப்படும். இதுவும் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். இதில் 75 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்தும் 25 வினாக்கள் ஆப்டிட்யூட் மற்றும் மெண்ட்டல் எபிலிட்டி பிரிவில் இருந்து கேட்கப்படும்.
நேர்முகத் தேர்வு 75 மதிப்பெண்களைக் கொண்டது.
இதில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்கள் குறைந்தபட்சம் 171 மதிப்பெண்களாவது பெற்றிருக்க வேண்டும். அதுவே அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்ணாக கருதப்படும்.
விண்ணப்பதாரர்கள் பொதுப்பிரிவினராக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 228 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோவை
விண்ணப்பக் கட்டணம்: 175.