மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசி்ரியர் பணியில் சேருவதற்கான தகுதி தேர்வு (CTET)செப்டம்பர் 2014 நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்ட அமைப்பான Central Board of Secondary Education இத்தேர்வை நடத்துகிறது.
மத்திய அரசு பள்ளிகள் தவிர தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கும் (CTET) தேர்வு பொருந்தும். CTET தேர்வு இரண்டு தாள்களை கொண்டதாகும்.
தாள்-I -ல் தகுதி பெறுபவர் 1 முதல் 5 வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
தாள்-II -ல் தகுதி பெறுபவர்கள் 6 முதல் எட்டாம் வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
1 முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற விரும்புபவர்கள் இருதாள்களிலும் தகுதி பெற வேண்டும்.
கல்வித்தகுதி: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை பிரிவிற்கான ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் + 2 தேர்ச்சியுடன் இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.