Showing posts with label விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நிர்வாகப் பயிற்சியாளர் பணி. Show all posts
Showing posts with label விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நிர்வாகப் பயிற்சியாளர் பணி. Show all posts

Saturday, 12 July 2014

விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நிர்வாகப் பயிற்சியாளர் பணி

மத்திய அரசின் கீழ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் விசாக் ஸ்டீல் நிறுவனத்தில் ராஷ்ட்ரிய இஸ்பட் நிகாம் லிமிடெடில் நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்களை டெக்னிகல் மற்றும் நான்-டெக்னிகல் என்ற இரண்டு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியும் - பணியிடங்களும்:
மொத்த நிரப்பப்படும் பணியிடங்கள்:
1. டெக்னிக்கல் பிரிவில் - 109
2. நான்-டெக்னிக்கல் பிரிவில் - 11
விசாக் ஸ்டீல் நிறுவனத்தின் டெக்னிகல் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவியில் கெமிக்கல் பிரிவில் - 05, சிவில் பிரிவில் - 04, எலெக்ட்ரிகல் பிரிவில் - 29, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பிரிவுகளில் - 03, இண்டஸ்ட்ரியல் பொறியியல் பிரிவில் - 02, மெக்கானிகல் பிரிவில் - 31, மெட்டலர்ஜி பிரிவில் - 32.  நான்-டெக்னிகல் பிரிவில் நிதித்துறையில் - 06, எச்.ஆர் பிரிவில் - 04, கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் - 01.
வயதுவரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.02.1986-க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: டெக்னிகல் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய துறையில் முழு நேரப் படிப்பாக பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நான்-டெக்னிகல் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போன்று கல்வித் தகுதி மாறுபடுவதால் முழுமையான விவரங்களுக்கு இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100. இதனை கோர் வங்கி செயல்பாடுடைய பாரத ஸ்டேட் வங்கியில் RINL/VSP Recruitment Account No. 30589461220 என்ற அக்வுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2014
மேலும் முழுமையான தகவல்களை பெற http://eproc.vizagsteel.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.