Showing posts with label Instrumentation. Show all posts
Showing posts with label Instrumentation. Show all posts

Friday, 1 January 2016

பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழக நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 100 நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக். முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Executive Trainee (Mechanical) - 50
பணி: Executive Trainee (Electrical) - 15
பணி: Executive Trainee (Electrical) -05
பணி: Executive Trainee (Civil) - 10
பணி: Executive Trainee (Control & Instrumentation) - 05
பணி: Executive Trainee (Mining) - 10
பணி: Executive Trainee (Computer) - 05
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், சிவில். Instrumentation, Electronics & Instrumentation,Instrumentation and Control, கம்ப்யூட்டர், மைனிங், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பொது பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடனும்,
எஸ்சி.,எஸ்டி., ஒபிசியினர் 50 சதவீத மதிப்பெண்களுடனும் பி.இ அல்லது பி.டெக் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.
வயது வரம்பு: 1.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2016 தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR),
Recruitment Cell,
Human Resource Department,
Neyveli Lignite Corporation Limited,
Corporate Office, Block-1,
NEYVELI- 607 801.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2016.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 29.01.2016.
மேலும் விவரங்களுக்கு www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 12 November 2015

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 147 தொழில்நுட்ப உதவியாளர் பணி

அனைவராலும் பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட  உள்ள 147 தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 147
பணியிடம்: இந்தியா முழுவதும்
காலியிடங்கள் விவரம்:
1. குஜராத் - 21
2. மகாராஷ்டிரா - 31
3. மேற்கு வங்காளம் - 12
4. வட கிழக்கு -II - 05
5. ஆந்திர பிரதேசம் - 01
6. ஹிமாச்சல பிரதேசம் - 05
7. ஜம்மூ காஷ்மீர்15
8. ஒரிசா - 06
9. உத்திர பிரதேசம் (மேற்கு) - 01
10. உத்திர பிரதேசம் (கிழக்கு) - 03
11. அசாம் - 01
12. ராஜஸ்தான்  - 10
13. மத்திய பிரதேசம் - 07
14. கர்நாடகம் - 11
15. பிகார் - 02
16. அந்தமான் மற்றும் நிகோபர் - 01
17. கேரளா - 01
18. செங்கல்பட்டு (சென்னை) - 04
தகுதி: பொறியியல் துறையில் Telecommunications, Electronics, Electrical, Radio, Computer, Information Technology(IT), Instrumentation பிரிவுகளில் பி.இ முடித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி (எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல்) முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செயய்ப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.13,600 - 25,420 + இதர சலுகைகள்.
விண்ணப்பக் கட்டணம்: ஓபிசி பிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.externalexambsnl.co.in அல்லது www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில்  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2015 வரை விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடங்கும் தேதி: 01.12.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.12,2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://intranet.bsnl.co.in/bsnl/admin/dirhr_recruitment/circulars/TTA-SRD%20%281%29.PDFஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 4 November 2015

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இளநிலை டெலிகாம் அலுவலர் பணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள், கை, கால் ஊனமுற்றிற மாற்றுத்திறனாளிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Telecom Officer (JTO (T))
காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Telecommunications, Electronics, Radio, Computer, Electrical, Information Technology(IT), Instrumentation பிரிவுகளில் பி.இ முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.எஸ்சி (எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல்) முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செயய்ப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.externalexambsnl.co.in அல்லது www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான தேதி: 01.12.2015 - 10.12.2015 வரை விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு AGM (Rectt), BSNL Corporate Office, New Delhi. தொலைப்பேசி எண்: 011-23352491, 011-23765386 தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

Friday, 1 May 2015

ஐடிஐ & டிப்ளமோ தகுதிக்கு ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனங்களில் பணி

மைசூர் மற்று மேற்கு வங்க மாநிலம், சல்போனி போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் நிறுவனத்தில் Industrial Workman பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 15/2015
பணி: Industrial Workman Grade-I (Trainee)
காலியிடங்கள்: 90
சம்பளம்: ரூ.7,000 - 24,240
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Printing Technology, Mechanical, Tool & Die, Electrical, Electronics, Instrumentation, Chemical Engineering போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ பொறியியல் முடித்திருக்க வேண்டும். அல்லது Letter Press, Offset, Platemaking, Graphic Arts, Retoucher, Tool & Die Making, Machanic Machine Tool Maintenance, Machinist, Machinisit Grinder, Turner, Fitter, Instrument Mechanic, Electrician, Electronic Mechanic போன்ற ஏதாவதொரு தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.brpnmpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு கைவசம் வைத்துக்கொள்ளவேண்டும். இவற்றுடன் தேவையான சான்றிதழ்களில் சுயசான்று செய்து வைத்துக்கொண்டு நேர்முகத் தேர்விற்கு வருகைதரும்போதும் அசல் சான்றிகழ்களுடன் கொண்டுவர வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.06.2015
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2015