அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப பட்டம் மற்றும் கணினி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Social Research Officer 'சி' - 01
தகுதி: சோசியல் ஒர்க்/ சோசியாலஜி/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன்/ மாஸ் கம்யூனிகேசன் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக புள்ளியியல்/ எஸ்பிஎஸ்எஸ். எம்.எஸ். ஆபீஸ் சாப்ட்வேர் ஆகியவற்றில் அறிவும், ஆங்கில புலமையும் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
ஜூனியர் புரொடியூசர் - 01
தகுதி: திரைப்படம் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன்/ மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக எம்.எஸ். ஆபீஸ் மற்றும் ஆங்கில புலமையும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
சோஷியல் ரிசர்ச் அசிஸ்டென்ட் - 03
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சோஷியல் ஒர்க் /சோஷியாலஜி/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன்/ மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக புள்ளியியல், எஸ்பிஎஸ்எஸ், எம்.எஸ். ஆபீஸ் சாப்ட்வேரில் அறிவும், ஆங்கில புலமை பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.