Showing posts with label இந்திய கப்பற்படையில் செய்லர் பணி. Show all posts
Showing posts with label இந்திய கப்பற்படையில் செய்லர் பணி. Show all posts

Thursday, 19 June 2014

இந்திய கப்பற்படையில் செய்லர் பணி

இந்திய கப்பற்படையில் 137-வது Sailors for Artificer Apprentice (AA) நுழைவு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று செய்லர் பணியில் பணியாற்ற தகுதியானவர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கும் தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இந்திய ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி திட்டத்தின் பெயர்: Artificer Apprentice (AA)
வயது வரம்பு:. 01.02.1995 - 31.01.1998-க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.(இரு தேதிகள் உட்பட)
கல்வித் தகுதி: கணிதம் ,இயற்பியல் பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பாடங்களுடன் 
இதர விருப்ப பாடங்களாக வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களையும் படித்திருக்க வேண்டும்
உடற் தகுதிகள்: 157 செ.மீட்டர் உயரமும் உயரத்திற்கேற்ற எடையும் மார்பளவும் பெற்றிருக்க வேண்டும்.
கண்பார்வை: கண்ணாடி அணியாமல் 6/12, 6/12 கண்ணாடி அணிந்தவர்களுக்கு 6/9, 6/12.
சம்பளம்: மாதம் ரூ 5200-20200 + தர ஊதியம் 2000 மற்றும் இதர சலுகைகள் அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி: 2015 பிப்ரவரி மாதம் INS சில்காவில் பயிற்சிகள் ஆரம்பமாகும். பயிற்சியில் வெற்றி பெருபவர்கள் 20 வருடங்கள் வரை பணியாற்றலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:27.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.