Showing posts with label tamil university jobs in thanjavur 2015. Show all posts
Showing posts with label tamil university jobs in thanjavur 2015. Show all posts

Thursday, 19 March 2015

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி

தமிழகத்தின் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 07 தொழில்நுட்ப உதவியாளர், அருங்காட்சியக காப்பாளர், ஊர்தி ஓட்டுநர், விலங்கு பராமரிப்பவர், துணைவேந்தர் இல்லப் பணியாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
காலியிடங்கள்: 07
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அருங்காட்சியக காப்பாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
வயதுவரம்பு: 35 - 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Ethnology, Anthropology, History of Tamil போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை அல்லது பட்டத்துடன் Museology துறையில் டிப்ளமோ அல்லது முனைவர் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தொழில்நுட்ப உதவியாளர்  - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: ஊர்தி ஓட்டுநர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 4 வருட Light & Heavy ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: விலங்கு பராமரிப்பவர் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: துணைவேந்தர் இல்லப் பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200 + அஞ்சல் கட்டணம் ரூ.40. மற்ற பிரிவினருக்கு ரூ.100 + அஞ்சல் கட்டணம் ரூ.40.
விண்ணப்பிக்கும் முறை:  www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தோ அல்லது நேரில் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamiluniversity.ac.in/download_pdfs/Advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.