Friday 18 January 2013

சென்னை மெட்ரோ ரயிலில் பணிகள்

தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவை இணைந்து செயல்படுத்தி வரும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது..
ஜப்பானிய வங்கியின் நிதி உதவியுடன் சுமார் 16,000 கோடி ரூபாய் செலவில் சென்னையில் தயாராகி வருகிறது மெட்ரோ ரயில் போக்குவரத்து. வரும் 2015 - 2016 நிதியாண்டில் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கைக்குத் தயாராகி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தொடங்கி, சென்னை மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வந்தபிறகு நடைபெறும் நிர்வாகம், பராமரிப்பு என பல்வேறு நிலைகளில், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள பணிகள் குறித்த முழு விவரங்களுக்கு www.chennaimetrorail.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு பயிற்சி

சென்னை ஐ.ஐ.டியில் கோடைகால Fellowship Programme-ல் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
பி.இ, பி.டெக், பி.எஸ்.சி பொறியியல் மற்றும் ஒருங்கிணைந்த எம்.இ, எம்.டெக் படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும், எம்.எஸ்சி, எம்.ஏ., எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக தேர்வுகளில் முதல் மூன்று ரேங்குகள் பெற்ற, சிறந்த கல்வி பின்னணி உள்ளவர்கள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.