மத்திய அரசுக்கு சொந்தமான Bailadila இரும்பு தாது சுரங்கத்தில் காலியாக உள்ள Field Attendant பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014
தேதி: 04.08.2014
பணி: Field Attendant (Trainee)
காலியிடங்கள்: 40
வயதுவரம்பு: 31.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரும்பு சுரங்கத்தில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி, பணி அனுபவம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை DGM (Finance), BIOM, Kirandul Complex, Kirandul என்ற முகவரிக்கு SBI கிளைகளில் டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கும் பணியின் பெயர், விண்ணப்பதாரரின் பெயர், தந்தை/தாய் பெயர், பாலினம், பிறந்த தேதி, வயது, தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, மின்னஞ்சல்/தொலைபேசி எண், கல்வித்தகுதி, மதிப்பெண் விவரம், கல்வி நிலைய முகவரி, சொந்த மாநிலம், மாவட்டம் போன்ற விவரங்கள் அடங்கிய பயோடேட்டா தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அதனுடன் டி.டி ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.