மே மாத வெயிலில் கூட காலை 10 மணிக்கும் மேல் வீணாக எரியும் தெரு விளக்குகளை நம்மூரில் நாம் நிறைய முறை பார்த்திருப்போம். இப்படி பொறுப்பற்றவர்களுக்கு சிந்தன் ஷா என்று வெளிநாடு வாழ் இந்தியர் கண்டுபிடித்துள்ள நவீன தொழில்நுட்பம் பொருந்திய தெருவிளக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று சொல்லலாம்.
அப்படி என்ன சிறப்பு அந்த தெரு விளக்கில் என்கிறீர்களா? இவர் கண்டுபிடித்துள்ள தெரு விளக்குகள் தெருக்களில் மக்கள் நடமாடும் இருக்கும் போது மட்டுமே ஒளிரும்.
இந்த ஒளி அமைப்பின் பெயர் ட்வைலைட் (Tvilight). இது, புத்திசாலித்தனமான எல்.ஈ.டி (LED) லைட்டிங் முறையாகும்.
சிந்தன் ஷா நெதர்லாந்தை சேர்ந்த டெல்ஃப்ட் யுனிவெர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி (Delft University of Technology)-யில் படிக்கும் மாணவராவார். இவர் சிட்டிசென்ஸ் (“CitySense”) என்ற ஒரு சென்சாரை வடிவமைத்துள்ளார். இந்த சிட்டி சென்ஸ் சுற்றிவர, 360 டிகிரி-யிலும் ஆட்கள் நடமாட்டத்தை திறன் பட ஆராய்கிறது.
