Showing posts with label என்சிசி சான்றிதழ் பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் பணி. Show all posts
Showing posts with label என்சிசி சான்றிதழ் பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் பணி. Show all posts

Thursday, 24 July 2014

என்சிசி சான்றிதழ் பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் பணி

என்சிசி சிறப்பு நுழைவு திட்டத்தின் மூலம் ஏப்ரல் 2015 ஷார்ட் சர்வீஸ் கமிஷனின் 37-வது கோர்ஸ்ஸில் சேர (SSC Non-Technical), NCC 'C' சான்றிதழ் பெற்ற திருமணம் ஆன, ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: ஆண்கள் - 50, பெண்கள் - 04
வயது வரம்பு: 19 - 25க்குள் இருக்க வேண்டும். 02.01.1990க்கு முன் மற்றும் 01.01.1996க்கும் பின் பிறந்திருக்கக் கூடாது.
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NCC சீனியர் டிவிஷனில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் பணியாற்றி NCC 'C' சான்றிதழுக்கான தேர்வில் 'B' Grade அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுத்தேர்வு, உளவியல் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கெஜட்டெட் அதிகாரியிடம் அட்டெஸ்ட் பெற்று தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அருகாமையில் உள்ள OC,NCC Unit-க்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.