Showing posts with label DRDO. Show all posts
Showing posts with label DRDO. Show all posts

Wednesday, 12 November 2014

பெங்களூர் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு துறையில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பெங்களூரில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை ஆராய்ச்சியாளர் பணி (JRF)
காலியிடங்கள்: 05
தகுதி: இசிஇ, சிஎஸ்இ துறையில் பி.இ அல்லது பி.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,000
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Director, Defence Avionics Research Establishment, Bangalore - 560093
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 14 October 2014

டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் Defence Research & Development Organisation (DRDO) நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டெக்னிகல் அசிஸ்டெண்ட் மற்றும் டெக்னீசியன் - ஏ பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 654
காலியிடங்கள் விவரம்:
1. சீனியர் டெக்னிகல் அசிஸ்டெண்ட் பிரிவில் 419
தகுதி: பொறியியல் பிரிவில் பி.எஸ்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
2. டெக்னீசியன்-ஏ பிரிவில் 235
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. இதனை Credit Card,Debit Card,Net banking மூலம் செலுத்தலாம். ஆஃப்லைன் முறையில் செலுத்துபவர்கள் தில்லியில் மாற்றத்தக்க வகையில் The Director, CEPTAM, Delhi என்ற இந்தியன் போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
தேர்வு: எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அமைந்திருக்கும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விரிவான கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, சம்பளம் மற்றும் தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.