Showing posts with label பட்டதாரிகளுக்கு புகையிலை வாரியத்தில் பல்வேறு பணி. Show all posts
Showing posts with label பட்டதாரிகளுக்கு புகையிலை வாரியத்தில் பல்வேறு பணி. Show all posts

Thursday, 21 August 2014

பட்டதாரிகளுக்கு புகையிலை வாரியத்தில் பல்வேறு பணி

ஆந்திர மாநிலம் குண்டூரில் செயல்பட்டு வரும் புகையிலை வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: புள்ளியியல் அதிகாரி
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: புள்ளியியல், கணிதம் போன்ற துறையில் முதுகலை பட்டம் அல்லது புள்ளியியலை ஒரு பாடமாக கொண்டு வணிக பொருளியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அனுபவம்: 3 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: கள ஆய்வாளர்/ தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.
வயது வரம்பு: 18  30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேளாண்மை துறையில் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: புகையிலை விவசாய பணியில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: புள்ளியியல் உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.
தகுதி: புள்ளியியல் துறையில் பட்டம் அல்லது புள்ளியியலை ஒரு பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: லோயர் டிவிசன் கிளார்க்
காலியிடங்கள் 11
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: கள உதவியாளர்
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 முடித்து புகையிலை விவசாயப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஸ்டெனோகிராபர் நிலை - 2
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ..9,300 - 34,800
வயது வரம்பு: மாதம் 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (கிரேடு - பி)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் துறையில் டிப்ளமோ பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.