Showing posts with label Assistant Commandant/DDO CISF. Show all posts
Showing posts with label Assistant Commandant/DDO CISF. Show all posts

Friday, 23 January 2015

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 800 காவலர் பணி

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (Central Industrial Security Force) அகில இந்திய அளவில் காலியாக உள்ள 800 காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 19.01.2015 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 வருடங்களும், ஓபிசியினருக்கு 3 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி விவரங்கள்:
உயரம்: 170 செ.மீ.,
மார்பளவு: குறைந்த பட்சம் 80 செ.மீ., (5 செ.மீ., விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.)
தூரப்பார்வை கண்ணாடி அணியாமல் குறைந்தது 6/6 மற்றும் 6/9 என்ற அளவில் சிறந்த பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடல் அளவுகள் அளத்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை 'Assistant Commandant/DDO CISF,Southzone'என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் கிராஸ் செய்யப்பட்ட போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும்.