Showing posts with label Assistant Manager (Business Development & Technology). Show all posts
Showing posts with label Assistant Manager (Business Development & Technology). Show all posts

Wednesday, 7 January 2015

தேசிய சிறுதொழில் கழகத்தில் உதவி மேலாளர் பணி

தேசிய சிறுதொழில் கழகம் லிமிடெட் (NSIC)நிறுவனத்தில் காலியாக உள்ள 53 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் மற்றும் நிறுவனத்தின் செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager (Business Development & Technology)
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.12600 - 32500
கல்வித்தகுதி: மார்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ, PGDBM பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிவில், எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (F&A)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.12600 - 32500
கல்வித்தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்று CA(Inter), ICWA(Inter) அல்லது M.Com அல்லது MBA, PGDBM முடித்திருக்க வேண்டும்.
பணி: Accounts Officer
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.12000 - 24000
கல்வித்தகுதி: பி.காம் அல்லது எம்.காம் அல்லது CA (Inter), ICWA (Inter) அல்லது பி.காம் பட்டத்துடன் MBA,PGDBM முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Company Secretary
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.24900 - 50500
கல்வித்தகுதி: பட்டம் பெற்று இந்திய கம்பெனி செக்ரட்டரீஸ் நிறுவகம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று நிறுவன உறுப்பினராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 42க்குள் இருக்க வேண்டும்.