இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் ராஜா ரமணா தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களு 10, பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Security Officer/A
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ராணுவத்தில் அதிகாரியாக பணி புரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
பணி: Security Guard - II- Group C
காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 27க்குள்ளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 32க்குள்ளும், ஒபிசியினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளை கழித்தால் 30 வயதாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற் திறன் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.