Showing posts with label Veterinary Science. Show all posts
Showing posts with label Veterinary Science. Show all posts

Monday, 15 February 2016

இந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் சர்ஜன் பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Surgeon (Assistant Commandant/Veterinary).
காலியிடங்கள்: 13
தகுதி: Veterinary Science, Animal Husbandry பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Veterinary கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் 157.5 செ.மீட்டர் உயரமும், மார்பளவு (சாதாரண நிலை) 77 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீட்டரும், பெண்கள் 142 செ.மீட்டர் உயரமும் அதற்கேற்ற எடையும் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மருத்துவ பரிசோதனை, உடற்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சலில் விண்ணப்பிக்க  விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மற்றும் தபாலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.