Showing posts with label tnpsc question out investigations in tamilnadu. Show all posts
Showing posts with label tnpsc question out investigations in tamilnadu. Show all posts

Wednesday, 10 July 2013

குரூப் 2 கேள்வித்தாள் அவுட்: பிரஸ் ஓனர் ரிஷிகேஷ் குண்டு கைது

குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரிஷிகேஷ் குண்டு என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழகம் முழுவதும் 12.8.2012-ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் முன்கூட்டியே வினாத்தாளை வைத்திருந்த இளம்பெண்ணை அதிகாரிகள் பிடித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவர் உள்பட மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்தை úóந்த மனோகரன் மகன் மோகன்பாபு (24), சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கணக்காளராக பணியாற்றும் ஜெய்நிவாசன் (26), மேடவாக்கத்தை சேர்ந்த பச்சியப்பன் மகன் சதீஷ்குமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல நாமக்கல்லை சேர்ந்த இன்டர்நெட் மைய உரிமையாளர் செல்வராஜ், திருவள்ளூரை சேர்ந்த சகோதரர்கள் தியாகராஜன்,