Showing posts with label Plus 2 tanittervarkal: apply in tatkal. Show all posts
Showing posts with label Plus 2 tanittervarkal: apply in tatkal. Show all posts

Saturday, 15 February 2014

பிளஸ் 2 தனித்தேர்வர்கள்: தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்(Plus 2 tanittervarkal: apply in tatkal)

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தத்கல் முறையில் பிப். 17 முதல் புதன்கிழமை (பிப்.19) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
Plus 2 tanittervarkal: apply in tatkal
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்வுத் துறையில் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, இப்போது விண்ணப்பிக்க விரும்புவோர் தத்கல் அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்குச் சென்று தனித்தேர்வர்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
வேறு இடங்களில் இருந்து ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாது. இந்த சிறப்பு மையங்கள் தொடர்பான விவரத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மண்டலத் தேர்வு துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்