Showing posts with label NLC Recruitment 2015. Show all posts
Showing posts with label NLC Recruitment 2015. Show all posts

Sunday, 28 December 2014

பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு என்எல்சியில் தொழிற்பயிற்சி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுநர் சட்டம் 1961ன் விதிகளுக்குட்பட்டு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி விவரங்கள் வருமாறு:
1. டெக்னிக்கல் அப்ரன்டிஸ் பயிற்சி:
காலியிடங்கள்:
மெக்கானிக்கல் - 70
எலக்ட்ரிக்கல் - 60
சிவில் - 20
இன்ஸ்ட்ருமென்டேசன் - 10
கெமிக்கல் - 10
மைனிங் - 10
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் - 10
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 10
கமர்ஷியல் பிராக்டிஸ் - 10

பயிற்சி காலம்: ஒரு வருடம்.
உதவித் தொகை: மாதம் ரூ.2,530.
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டியினர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 31.01.2012க்கு பின் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் (வொகேஷனல்) அப்ரன்டிஸ் பயிற்சி
காலியிடங்கள்:
குழந்தை கவனிப்பு மற்றும் சத்துணவு - 5.
பல் மருத்துவம் - 5
பல் டெக்னீசியன் - 2
இசிஜி ஆடியோ மெட்ரிக் டெக்னீசியன் - 5
ஹெல்த் வொர்க்கர் - 15
மருத்துவ ஆவண உதவியாளர் - 10
மருத்துவமனை பராமரிப்பு - 25
பல்நோக்கு பணியாளர் - 15