Showing posts with label delhi metro rail. Show all posts
Showing posts with label delhi metro rail. Show all posts

Saturday, 10 January 2015

தில்லி மெட்ரோ ரயில்வேயில் 189 அதிகாரி பணி

தில்லி மெட்ரோ ரயில்வேயில் (டி.எம்.ஆர்.சி) காலியாக உள்ள 189 எக்ஸிகியூட்டிவ், நான்-எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எக்ஸிகியூட்டிவ், நான்-எக்ஸிகியூட்டிவ்
காலியிடங்கள்: 189. இதில் 97 ஜூனியர் பொறியாளர் பணியிடங்களும், 28 உதவி புரோகிராமர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.
தகுதி: அசிஸ்டென்ட் புரோகிராமர் பணிக்கு பி.சி.ஏ., பி.எஸ்.சி (ஐடி, கணிதம்) முடித்திருக்கவேண்டும். பொறியாளர் பணியிடங்களுக்கு சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், தனிநபர் நேர்காணல், மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.400. எஸ்.சி., எஸ்.டி.,மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150.
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 12.01.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள், விரிவான தகுதிகள் மற்றும் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய   www.delhimetrorail.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.