Showing posts with label Power Grid Corporation. Show all posts
Showing posts with label Power Grid Corporation. Show all posts

Friday, 31 October 2014

மின்பகிர்மான கழகத்தில் எலக்ட்ரிக்கல் பொறியாளர் பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Power Grid Corporation-ல் காலியாக உள்ள எக்சியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியானவர்கள் GATE-2015 தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விளம்பர எண்: CC/04/2014 தேதி: 02/09/2014
பணி: Executive Trainee (Electrical)
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 31.12.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்க்கல் (ஃபவர்), எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், ஃபவர் சிஸ்டம் பொறியியல் துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி பொறியியல் முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல் துறையில் AMIE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதத்தில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: தோராயமாக மே-ஜூன் 2015 நடைபெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 15.01.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.