Showing posts with label ITBP. Show all posts
Showing posts with label ITBP. Show all posts

Monday, 15 February 2016

இந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் சர்ஜன் பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Surgeon (Assistant Commandant/Veterinary).
காலியிடங்கள்: 13
தகுதி: Veterinary Science, Animal Husbandry பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Veterinary கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் 157.5 செ.மீட்டர் உயரமும், மார்பளவு (சாதாரண நிலை) 77 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீட்டரும், பெண்கள் 142 செ.மீட்டர் உயரமும் அதற்கேற்ற எடையும் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மருத்துவ பரிசோதனை, உடற்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சலில் விண்ணப்பிக்க  விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மற்றும் தபாலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 9 February 2015

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலர் பணி

மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான இந்தோ-திபெத் எல்லை காவல் படையில் ஏற்பட்டுள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தலைமை காவலர் (Dresser Veterinary)
காலியிடங்கள்: 39
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட para Veterinary Course அல்லது டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 16.02.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை "Central Recruitment Fee Stamps (CRFS)" முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: THE INSPECTOR GENERAL (NE), FRONTIER HQ, ITB POLICE, OLD AP SECRETARIAT BUILDING, CANTT AREA, GS ROAD, SHILLONG, (MEGHALAYA) - 793001.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 27 July 2014

இந்தோ - திபெத்திய காவல் படையில் பணி

இந்தோ திபெத்திய காவல் படையில் காலியாக உள்ள 58 துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்று சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://itbpolice.nic.in/itbpwebsite/index.html  என்ற இணையதளத்தை பார்க்கவும்