Monday 30 June 2014

எம்.பி. ஆன்லைன் லிமிடெட் நிறுவனத்தில் பணி

MP online Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 86 Divisional Coordinator, District Coordinator மற்றும் Software Engineer பணியிடங்களை நிரப்ப இளம் மற்றும் திறமையான இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 86
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Divisional Coordinator - 10
2. District Coordinator - 51
3. Software Engineer - 25
கல்வித் தகுதி:
1.Divisional & District Coordinator பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டத்துடன் PGDCA / DOEACC 'ஒரு வருட படிப்பில் டிப்ளமோவில் "A" பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அனைத்தும் முழுநேர படிப்பாக இருக்க வேண்டும்.
2.Software Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் (தகவல் தொழில்நுட்பம் / கம்ப்யூட்டர் சயின்ஸ்) பிரிவில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும். அல்லது தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் MCA,M.Sc முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எம்.பி. வாரியம் ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் வினாக்கள் அமைந்திருக்கும் 100 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
1.  District & divisional Coordinator பணிக்கு ரூ. 390.
2. Software Engineer பணிக்கு. ரூ. 390
3. மற்ற பணிகளுக்கு ரூ.780
விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தயவுசெய்து ஆன்லைன் முறை மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தி அதற்கான இடத்தில் புகைப்படம் மற்றும் கையெழுத்து ஸ்கேன் பிரதியை பதிவேற்ற செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 12.07.2014
தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 18.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mponline.gov.in  என்ற இணை.யதளத்தைப் பார்க்கவும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய பருத்தி கழகத்தில் பணி

மத்திய ஜவுளித்துறையின் கீழ் நவிமும்பையில் செயல்பட்டு வரும் இந்திய பருத்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்கால அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Consultant (ERP)
காலியிடம்: 01
சம்பம்: மாதம் ரூ.40,000 - 50,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  Computer Science, Information Technology துறையில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சி.ஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: Zonal Techno Functional ERP Co-ordinators
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 35,000
கல்வித்தகுதி: IT,Computer Science துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மதிப்பெண், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cotcorp.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HRD), The Cotton Corporation of India Ltd, Kapas Bhavan, Plot No: 3A, Sector - 10, C.B.D.Belapur, Navi-Mumbai-400614
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cotcorp.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday 29 June 2014

பொறியியல் பட்டதாரிகளுக்கு TCIL-ல் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணி

மத்திய அரசுக்கு சொந்தமான TCIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணிக்கு விரும்பம் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Trainee (Electronics & Communication)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் 16,400 - 40,500
வயதுவரம்பு: 01.06.2014 தேதியின்படி 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  Electronics & Communication Engineering துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். GATE - 2014 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE - 2014 நுழைவுத் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முக் தேர்விற்கு அழக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி காலம்: 6 மாதம்
உதவித்தொகை: மாதம் ரூ.20,000
விண்ணப்பிக்கும் முறை: www.tcil.india.com என்ற இணையதளத்தில் Career பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று இணைத்து  விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Executive Director (HRD), Telecommunications Consultants India Limited, TCIL Bhawan, Greater Kailash -I, New Delhi -110048.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.07.2014
மேலும் முழுமயைன விவரங்கள் அறிய www.tcil.india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

லட்சுமி விலாஸ் வங்கியில் பணி

லட்சுமி விலாஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள Deputy Chief Financial Officer, Principal- Staff training College , Regional Head மற்றும் Law Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரங்கள்:
1. Head – Human Resources Department
2. Deputy Chief Financial Officer/DGM (Accounts)
3. Principal – Staff Training College
4. Regional Head
5. Law Officer
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். சட்டம் அதிகாரி பணிக்கு 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: முதுகலை பட்டமும் சம்மந்தப்பட்ட துறையில் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். சட்டம் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சட்டத்துறையில் பட்டமும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager,
HRD Department Lakshmi Vilas Bank Ltd Administrative Office,
No 4, Sardar Patel Road, Guindy, Chennai – 600032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.lvbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தேசிய அலுமினிய தொழிற்சாலையில் பொறியாளர் பணி

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் தேசிய அலுமினிய தொழிற்சாலையில் (நால்கோ) காலியாக உள்ள 125 பொறியாளர் பணியிடங்களுக்கு பி.இ. முடித்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் பொறியாளர் டிரெய்னீஸ்
காலியிடங்கள்: 125
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 30.6.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். SC,ST,OBC மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், புரொடக்சன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல், பவர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன், டெலிகாம், எலக்ட்ரிக்கல், மெட்டாலர்ஜிக்கல், சிவில், ஆர்க்கிடெக்சர், செராமிக்ஸ் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங், கெமிக்கல், அப்ளைடு கெமிஸ்ட்டிரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்சிஏ போன்ற துறைகளில் ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
குறிப்பு: மேற்காணும் பொறியியல் பாடப் பிரிவுகளில் கேட் - 2014 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்டபொறியியல் பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014.

Saturday 28 June 2014

பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு பணி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டும் வரும் Central Warehousing Corporation-ல் காலியாக உள்ள ware house Assistant (Grade-II)பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ware house Assistant (Grade-II)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம்5 ரூ.8,900 - 24,320
வயது வரம்பு: 30.06.2014 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் M.S. Office பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மதிப்பெண், திறன், கம்ப்யூட்டர் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை The Regional Manager, Central Warehousing Corporation, Jaipur என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
The Regional Manager, Central Warehousing Corporation, A-25, Tilak Marg, Opp-Udy og Bhawan, C-Scheme, Jaipur - 302005.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/app_wa_II_jai_210514.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மத்திய அரசில் புலன் விசாரணையாளர் பணி

புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகத்தின் Ministry of Statistics & Programme Implementation (MOSPI) பல்வேறு பிராந்திய அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 652 Field Investigators  (FIs) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Field Investigators  (FIs)
மொத்த காலியிடங்கள்: 652
புள்ளியல், பொருளாதாரம், கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில அறிவு மற்றும் உள்ளூர் மொழி அறிவு தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். MS Office தெரிந்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 21-30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC,ST,OBC பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 16,500.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mospi.nic.in என்றஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். சுய சான்று செய்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mospi.nic.in/Mospi_New/upload/GAdvertisement2014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்திய வன கணக்கெடுப்பு துறையில் பணி

இந்திய வன கணக்கெடுப்பு துறையில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள Technical Associate (TA/ JRF) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30 ஆம் தேதி நடைபெறுகின்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம்: Forest Survey of India
பணி: Technical Associate (TA-JRF)
கல்வித்தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் M.Sc, BE,B.Tech,MCA போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.16000
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் தங்களைப்பற்றிய விவரம் அடங்கிய Bio-Data, கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சான்றிளிக்கப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் எடுத்துக்கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.06.2014
பதிவு செய்யப்படும் நேரம்: காலை 09:00 மணி.
நேர்முகத் தேர்வு நடைபெற உள்ள இடம்: Forest Survey of India,
Kaulagarh Road, Dehradun-248195,
Uttarakhand
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.fsi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Friday 27 June 2014

CPRI-ல் பல்வேறு பணி

மத்திய பவர் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் CPRI நிறுவனத்தில் காலியாக உள்ள Director, Engineering Officers, Technician, Assistant பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 27
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Joint Director - 02
2. Engineering Officers - 06
3. Engineering Assistant - 03
4. Librarian - 01
5. Assistant - 10
6. Technician - 05
கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cpri.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனின் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:30.06.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விரிவான கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cpri.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தெற்கு தில்லி மாநகராட்சியில் ஆசிரியர் பணி

தெற்கு தில்லி மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 1532 Primary Teacher, Nursery Teacher , Special Educator மற்றும் Counselor பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 1532
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Teacher (Primary) - 800
2. Teacher (Nursery) - 120
3. Special Educator (Primary) - 588
4. Counselors - 24
கல்வித் தகுதி:
1. Primary Teacher பணிக்கு 1. +2 தேர்ச்சி பெற்று ஆசிரியர் பயிற்சியில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது B.Ed. முடித்திருக்க வேண்டும் CBSE நடத்தும் CTET தேர்வில் தாள்-1ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.Teacher (Nursery) பணிக்கு +2 முடித்து ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது   B.Ed. முடித்திருக்க வேண்டும்
3. Special Educator பணிக்கு +2 தேர்ச்சி பெற்று 2 வருட சிறப்பு கல்வியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். CBSE நடத்தும் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..
4 Counselors பணிக்கு உளவியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினர் 18 முதல் 30க்குள்ளும், SC,ST பிரிவினர் 18 முதல் 35க்குள்ளும், ஓ.பி.சி. பிரிவினர் 18 முதல் 33க்குள்ளும், மற்ற பிரிவினர்கள் 18 முதல் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது..
A. Secondary Examination : 25 %
B. Sr. Sec. Examination : 45%
C. Teacher Training : 30%
Total Weightage/Marks : 100 என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் 27,000.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். SC,ST,PWD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.mcdonline.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தில் அனைத்தும் துல்லியமான விவரங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் மற்றும் பொருத்தமான இடத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mcdonline.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

MDL நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி

இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான Mazagon Dock Limited (MDL)நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Chief Security,Chief Manager (Naval Of,Asst. Company Secretary
(Manager),Assistant Manager (Legal)போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 750
பணி: Deputy Chief Security - 01
வயது வரம்பு: 03.07.2014 தேதியின்படி 48-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,200

பணி: Chief Manager(Naval Officer) - 05
வயது வரம்பு: 03.07.2014 தேதியின்படி 44-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000

பணி: Asst. Company Secretary
(Manager)- 01
வயது வரம்பு: 03.07.2014 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500

பணி: Assistant Manager (Legal) - 01
வயதுவரம்பு: 03.07.2014 தேதியின்படி 32-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
கல்வித்தகுதி: Mechanical,Electronics/ Electronics & Communication,Electrical &
Instrumentation,Naval Architecture/ Naval Architecture & Ship Build
ing/Naval Architecture & Ocean பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mazagondock.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் “Mazagon Dock Limited” பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Thursday 26 June 2014

BEL நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 31 பணியிடங்களை நிரப்ப பத்தாம் வகுப்புடன் தேர்ச்சியுடன் ராணுவ அல்லது துணை ராணுவப் படைகளில் பணியாற்றிய அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி ஜூனியர் சூப்பர்வைசர் (செக்யூரிட்டி)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.10,050 - 25,450 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அனுபவம்: ராணுவம் அல்லது கடற்படை அல்லது விமானப்படைகளில் போன்ற ஏதாவதொன்றில் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரியாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஹவில்தார் (செக்யூரிட்டி)
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.8,330 - 22,000 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
அனுபவம்: பாதுகாப்பு படையில் 15 வருடம் பணியாற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் லேடி சர்ச்சர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.7,960 - 21,020 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அனுபவம்: பாதுகாப்பு படை, துணை ராணுவப்படை ஆகியவற்றில் குறைந்தது 3 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.300. இதனை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பயன்படுத்தி ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் சேவை கட்டணம் ரூ.25 சேர்த்து ரொக்கமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Manager (HR/Central),
Bharat Electronics Limited,
Jalahalli Post,
BANGALORE 560013.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வாப்கோஸ் நிறுவனத்தில் டிரெய்னி பணி

வாப்கோஸ் நிறுவனத்தில் பொறியாளர் டிரெய்னி பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் GATE 2014 தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.wapcos.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

அசாம் அஞ்சல் துறையில் MTS பணி

அசாம் அஞ்சல் துறையில் காலியாக உள்ள Multitasking staff (MTS) and Postman/Mail Guard பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: 67
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Multi-Tasking Staff - 27
2. Postman/Mail Guard - 40
சம்பளம்:
MTS பணிக்கு மாதம் ரூ. 5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800.
Postman/Mail Guard பணிக்கு ரூ. 5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
வயது வரம்பு 02.07.2014 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:  MTS பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Postman/Mail Guard பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400.
விண்ணப்பிக்கும் முறை: http://www.submitonline.in/dopassam என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2014
தேர்வு நடைபெறும் தேதி: 27.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.submitonline.in/dopassam/instruction/Advertisement.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Wednesday 25 June 2014

ஹிந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தலி அப்ரண்டீஸ் பயிற்சி

ஹிந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அப்ரண்டீஸ்
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், இன்ஸ்ட்ருமென்டேன், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற துறைகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, உதவித்தொகை, பயிற்சி காலம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hindpaper.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் பொறியாளர் பணி

இந்திய எரிசக்தி துறையின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை மேலாளர்: (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 05
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக், பி.எஸ்சி (பொறியியல்) ஏஎம்ஐஇ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27.06.2014 தேதியின்படி 39க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,990 - 58,000.
பணி: முதுநிலை பொறியாளர்: (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 10
கல்வித் தகுதி: பவர்சிஸ்டம் அனலிசிஸ் அல்லது பவர் சிஸ்டம் பொறியியல் பாடத்தில் எம்.டெக்., அல்லது பி.எச்டி முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 27.06.2014 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை 'Power Grid Corporation' என்ற பெயருக்கு புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் ஏதாவதொரு வங்கியில் டிடியாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.powergridindia.com என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Power Grid Corporation of India Limited,
B9, Qutab Institutional Area,
Katwariasarai,
NEWDELHI 110 016.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2014.
ஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 11.07.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் Apprentice பணி

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Graduate Apprentice பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 62
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemical - 30
2. Civil - 02
3. Computer Science - 02
4. Electrical - 04
5. Electronics - 01
6. Instrumentation - 06
7. Mechanical - 15
8. Safety - 02
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.10.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager (Recruitment & Promotion),
BPCL Kochi Refinery Ambalamugal,
Kochi – 682302
விண்ணப்பிபிபதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bpclcareers.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Tuesday 24 June 2014

மசகோன் டாக் நிறுவனத்தில் டிரெய்னி பணி

இந்திய அரசின்கீழ் இயங்கி வரும் மசகோன் டாக் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி
காலியிடங்கள்: 1500
கல்வித் தகுதி: ஃபிட்டர், பைப் பிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக் கிரேன் ஆஃப்ரேட்டர், பெயிண்டர், கார்பெண்டர், வெல்டர், ரிக்கர், மெஷினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mazagondock.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Mazagon Dock Limited என்ற பெயரில் Mumbaiல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (HR-Rec-NE), Recruitment Cll, Service Block-3rd floor , Mazagon dock Limited, Dockyard road, Mumbai - 400010.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கு இந்திய வனத்துறையில் பணி

இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அந்தஸ்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு அறிவிப்பு எண்: 10/2014-IFoS
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 31.05.2014
தேர்வின் பெயர்: Indian Forest Service Examination,2014
வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 21-32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics, Zoology, Agriculture, Forestry போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், புதுச்சேரி , திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட 59 மையங்களில் நடைபெறுகிறது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் உரிய செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும் அல்லது நெட் பேங்கிங் முறையிலும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் எழுத்துத் தேர்வுக்கான விளக்கங்கள், பாடமுறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு SAIL நிறுவனத்தில் பணி

Steel Authority of India Limited (SAIL) நிறுவனத்தின் IISCO ஸ்டீல் தொழிற்சாலையில் காலியாக உள்ள Operator-cum-Technician, Attendant-cum-Technician 473 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 473
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Operator-cum-Technician - 299
(i) Boiler Operation - 09
(ii) Trainee - 290
2. Attendant-cum-Technician - 174
(i) Boiler Operation - 05
(ii) Trainee - 169
வயது வரம்பு: OCT, ACT (Boiler Operation) பணிகளுக்கு விண்ணப்பிக்கும்  பொதுப் பிரிவினருக்கு 18  -30-க்குள்ளும், SC/ST பிரிவினருக்கு 18 - 35-க்குள்ளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 18 - 33-க்குள்ளும் இருக்க வேண்டும்.
ACT, OCT (Trainee)பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு 18  - 28-க்குள்ளும், SC/ST பிரிவினருக்கு 18 - 33-க்குள்ளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 18 - 31-க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: Operator-cum-technician பணிக்கு மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்று ஆட்டோமொபைல், செராமிக், வேதியியல், சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கானிக்கல், உலோக/ உற்பத்தி போன்ற துறைகளில் இரண்டாம் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
Attendant-cum-Technician பணிக்கு மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்று ஏர் கண்டிஷனிங் & குளிர்பதனம், வரையாளர்கள் (சிவில்), வரையாளர்கள் (Mech), எலக்ட்ரிசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர்,மெஷினிஸ்ட், மெக்கானிக் மோட்டார் வாகனம், மெக்கானிக் டீசல், டர்னர், வெல்டர் பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: OCT (Boiler Operation, Trainee பணிக்கு பொதுப்பிரிவினர் ரூ. 250, ACT (Boiler Operation, Trainee பணிக்கு ரூ.150. SC/ST பிரிவினருக்கு ரூ. 50 மட்டும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in அல்லது http://sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM (Pers-CF),
CEO’s Office Complex,
7 The Ridge, Burnpur-713325.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.07.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Monday 23 June 2014

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பாதுகாவலர் பணி

பெங்களூரில் செயல்பட்டு விரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  Jr.Supervisor (Security)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.10,050 - 25,450
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய முப்படைகள் ஏதாவதொன்றில் JCO தகுதிக்குரிய பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Havildar (Security)
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.8,330 - 22,000
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய முப்படைகள் ஏதாவதொன்றில் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Lady Searcher
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.7,960 - 21,020
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பாதுகாப்பு படைகள் அல்லது துணை இராணுவ படைகளில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின் படி நிர்ணியிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் செல்லானை பயன்படுத்தி பணமாக கட்ட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Manager (HR/Central), Bharat Electronics Limiter, Jalahalli Post, Bangalore - 560013.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.