புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விவசாய ஆர்ய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள 11 Assistant Director (official Language) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Director
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,000 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 22.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: அகில இந்திய அளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.